வீடு / சமையல் குறிப்பு / கோபி பராத்தா

Photo of Gobi Paratha by Priya Tharshini at BetterButter
406
0
0.0(0)
0

கோபி பராத்தா

Jan-03-2019
Priya Tharshini
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

கோபி பராத்தா செய்முறை பற்றி

காளிஃப்ளவரை துருவி மசாலா சேர்த்து வதக்கி சப்பாத்திக்குள் ஸ்டப் செய்வது இந்த பராத்தா.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. கோதுமை மாவு - 1.5 கப்
  2. உப்பு - 1 தேக்கரண்டி
  3. தண்ணீர் - தேவைக்கு
  4. எண்ணெய் - 4 தேக்கரண்டி + தேவைக்கு
  5. சீரகம் - 1 தேக்கரண்டி
  6. துருவின காளிஃபளவர் - 3/4 கப்
  7. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  8. மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
  9. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  10. கொத்தமல்லி - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் கோதுமை மாவு,எண்ணெய்,உப்பு சேர்த்து கலக்கவும்.
  2. தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்துக் கொள்ளவும். 1/2 மணி நேரம் ஊற விடவும்.
  3. காளிஃப்ளவரை 5 நிமிடம் வெந்நீரில் ஊற வைக்கவும்.
  4. தண்ணீரை வடித்து காளிஃப்ளவரை ட்ரை செய்து துருவி வைக்கவும். காளிஃப்ளவரில் தண்ணீரை நன்கு பிழிந்து எடுக்கவும்.
  5. கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து துருவின காளிஃப்ளவரை சேர்த்து வதக்கவும்.
  6. அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு,கரம் மசாலா சேர்க்கவும்.
  7. 5 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்.
  8. நன்கு வதங்கியதும் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். ஸ்டப்பிங் தயார்.
  9. சப்பாத்தி மாவையும் ஸ்டப்பிங்கையும் சமமாக பிரிக்கவும்.
  10. சப்பாத்திமாவை சிறிதாக தேய்த்து நடுவில் ஸ்டப்பிங் வைக்கவும்.
  11. ஓரங்களை சேர்த்து சீல் செய்து மூடவும்.
  12. மாவை தோட்டு அதை பராத்தா போல் தேய்க்கவும்.
  13. தோசைகல்லில் போடவும்.
  14. தேவையாண எண்ணெய் சேர்த்து பராத்தாவை பொன் நிறமாக போட்டு எடுக்கவும்.
  15. காளிஃப்ளவர் பராத்தா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்