வீடு / சமையல் குறிப்பு / மட்டன் செமி கிரேவி

Photo of Mutton semi gravy by Gilda Kidson at BetterButter
400
1
0.0(0)
0

மட்டன் செமி கிரேவி

Jan-06-2019
Gilda Kidson
18 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மட்டன் செமி கிரேவி செய்முறை பற்றி

A semi gravy which goes well to all kind of dishes

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரை கிலோ மட்டன்
  2. தக்காளி 1 பெரிய வெங்காயம் 2
  3. புதினா மல்லி தேவைக்கேற்ப
  4. மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மட்டன் மசாலா கறி மசாலா கரம் மசாலா உப்பு தேவைக்கேற்ப
  5. பெப்பர் இஞ்சி பூண்டு விழுது தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. குக்கரில் மட்டன் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் பொடி மிளகாய் தூள் பெப்பர் தூள் புதினா ஆகியவற்றை கலந்து கொள்ளவும்
  2. கலந்து வைத்த மட்டனை 15 நிமிடம் marinate செய்யவும்
  3. பின்பு மட்டனை குக்கரில் 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்
  4. பின்பு ஒரு பேனில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் சீரகம் சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்
  5. பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கி விடவும்
  6. பின்பு 2 வெங்காயம் மற்றும் நான்கு பச்சைமிளகாயை நறுக்கி நன்றாக வதக்கிக் கொள்ளவும்
  7. வதங்கிய வெங்காயத்துடன் தக்காளியை சேர்த்துக் கொள்ளவும்
  8. தக்காளி வதங்கியவுடன் மசாலா பொடிகள் அனைத்தையும் தேவைகளுக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்
  9. வேக வைத்த மட்டன் மற்றும் அதன் தண்ணீரை மசாலா நன்கு கலந்தவுடன் சேர்த்துக் கொள்ளவும்
  10. பின்பு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  11. பின்பு மூடி போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்
  12. பின்பு புதினா மற்றும் மல்லி இலையை சேர்த்து கொள்ளவும்
  13. பின்பு கிரேவியை 5 நிமிடம் வேக வைத்து விட்டு இறக்கிக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்