வீடு / சமையல் குறிப்பு / தாபா ஸ்டைல் பனீர் கிரேவி

Photo of Dhaba Style Paneer gravy by Sowmya Sundar at BetterButter
734
0
0.0(0)
0

தாபா ஸ்டைல் பனீர் கிரேவி

Jan-09-2019
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தாபா ஸ்டைல் பனீர் கிரேவி செய்முறை பற்றி

தாபாவில் பரிமாறப்படும் பனீர் கிரேவியின் செய்முறை இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • பான் பிரை
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பனீர் துண்டுகள் 1 கப்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 3
  4. பச்சை மிளகாய் 1
  5. எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. நெய் 1 டீஸ்பூன்
  8. சீரகம் 1 டீஸ்பூன்
  9. பட்டை , கிராம்பு, ஏலக்காய் தலா 2
  10. இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
  11. புதினா மல்லி 1 பிடி
  12. மஞ்சள் தூள் 1/2 +1/2 டீஸ்பூன்
  13. மிளகாய் தூள் 1/2 + 1 டீஸ்பூன்
  14. மல்லி தூள் 1/2 + 1 டீஸ்பூன்
  15. கரம் மசாலா 1/2 + 1/2 டீஸ்பூன்
  16. சர்க்கரை 1/8 டீஸ்பூன்
  17. கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன்
  18. கசூரி மேத்தி 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பனீரை உப்பு, தலா 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள், தனியா தூள் , கரம் மசாலா சேர்த்து 10 நிமிடம் ஊற விடவும்
  2. வெங்காயத்தை பச்சை மிளகாய் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். தக்காளியை தனியாக அரைத்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், பட்டை ,கிராம்பு, ஏலக்காய் தாளித்து அரைத்த வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. பின் அதில் எல்லா பொடி வகைகளையும் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்கவும்
  5. அதன் பின் கசூரிமேத்தி மற்றும் கடலைமாவு , புதினா மல்லி தழை சேர்த்து பிரட்டவும்
  6. பின் தக்காளி விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்
  7. கடாயில் நெய் விட்டு பனீரை சேர்த்து லேசாக வதக்கவும்
  8. பின் அதை தக்காளி கிரேவியில் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்
  9. தாபா ஸ்டைல் பனீர் கிரேவி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்