வீடு / சமையல் குறிப்பு / பாதாம் முந்திரி ரோல்

Photo of Badam Cashew nut roll by sudha rani at BetterButter
615
0
0.0(0)
0

பாதாம் முந்திரி ரோல்

Jan-12-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
100 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

பாதாம் முந்திரி ரோல் செய்முறை பற்றி

விருந்து என்றால் அதில் இனிப்பு தவறாமல் இடம்பெறும் அது கொஞ்சம் ஸ்பெஷலா ரிச்சானதாக ஒரு ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. முந்திரி 100 கிராம்
  2. சர்க்கரை 100 கிராம்
  3. தண்ணீர் 2 டேபிள்ஸ்பூன்
  4. ரோஸ் வாட்டர் சிறிது
  5. பச்சை கலர் சிறிது
  6. பாதாம் 200 கிராம்
  7. சர்க்கரை 200 கிராம்
  8. லிக்விட் குளுகோஸ் 2 ஸ்பூன்
  9. நெய் 1 ஸ்பூன்
  10. அலங்கரிக்க:
  11. சில்வர் தாள் 2

வழிமுறைகள்

  1. முந்திரியை மெல்லிய தீயில் நிறம் மாறாமல் லேசாக வறுத்து பின் பொடிக்கவும்
  2. சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வந்ததும் முந்திரி பொடியை தூவி நன்கு கிளறவும்
  3. நன்கு திரண்டு கெட்டியாக வரும் போது சிறிது பச்சை நிறம் சேர்த்து கலந்து கிளறவும்
  4. பின் இறக்கி ரோஸ் வாட்டர் சிறிது கலந்து கொண்டு ஆறவிடவும்
  5. பாதாமை சுடுதண்ணீரில் ஊறவிட்டு தோல் உரித்து கிரைண்டரில் போட்டு நன்கு நைசாக அரைக்கவும்
  6. வாணலியில் நெய் விட்டு பாதாம் விழுதை சேர்த்து 2 நிமிடங்கள் வரை வதக்கவும்
  7. பின் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்
  8. சற்று சேர்ந்தாற் போல் வரும் போது லிக்விட் குளுக்கோஸை சிறிது தண்ணீரில் கரைத்து பின் சேர்த்து கிளறவும்
  9. தொடர்ந்து ஒரு 5 நிமிடங்கள் வரை கிளறி அடுப்பை அணைத்து அந்த சூட்டிலே தொடர்ந்து கிளறவும்
  10. சிறிது நேரத்தில் சப்பாத்தி மாவு போல் உருண்டு திரண்டு வரும்
  11. பின் 1/4 அங்குல கணத்தில் சப்பாத்தியாக திரட்டி (நீளவாக்கில்) வைக்கவும்
  12. பின் பட்டர் பேப்பரில் சிறிது நெய் தடவி திரட்டிய பாதாமை வைத்து அதன் மேல் கிளறி ஆறவிட்ட முந்திரி பொடியை பரப்பி வைக்கவும்
  13. பின் மிகவும் மெதுவாக உருட்டி வைக்கவும்
  14. பின் மெதுவாக பட்டர் பேப்பரை எடுத்து விட்டு சில்வர் தாளில் சுற்றவும்
  15. பின் 2 அங்குல நீளத்தில் ( விரல் அளவுக்கு) கட் செய்து கொள்ளவும்
  16. லிக்விட் குளுக்கோஸை சேர்ப்பதால் பாதாம் கலவை இறுகாமல் நன்றாக இருக்கும்
  17. வெளியே வெள்ளை நிறம் உள்ளே பச்சை நிறம் என்றும் பார்பதற்கு மட்டும் இன்றி ருசியாகவும் இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்