வீடு / சமையல் குறிப்பு / விருந்து உணவு வகைகள் !

Photo of PARTY MENU ! by Ramani Thiagarajan at BetterButter
360
3
0.0(0)
0

விருந்து உணவு வகைகள் !

Jan-14-2019
Ramani Thiagarajan
1800 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

விருந்து உணவு வகைகள் ! செய்முறை பற்றி

இந்த விருந்து உணவு வகைகள் அனைத்து வயதினராலும் விரும்பி உண்ணத்தக்கதாகும்.

செய்முறை டாக்ஸ்

 • நான் வெஜ்
 • ஈஸி
 • டின்னெர் பார்ட்டி
 • தமிழ்நாடு
 • பிரெஷர் குக்
 • ஸ்டீமிங்
 • ஸாட்டிங்
 • மெயின் டிஷ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. சாப்பாட்டு அரிசி- 750 கிராம்
 2. பாசுமதி அரிசி - 1 கிலோ
 3. கறி -1 கிலோ
 4. இட்லி அரிசி-1 கிலோ
 5. உளுத்தம்பருப்பு - 1/4 கிலோ
 6. சின்ன வெங்காயம் 1/2 கிலோ
 7. காய்ந்த மிளகாய் - 6
 8. கரம் மசாலா - 3 மேஜைக் கரண்டி
 9. மஞ்சள் தூள் - 2 மேஜைக் கரண்டி
 10. மிளகு தூள் - 4 மேஜைக் கரண்டி
 11. வறுத்து அரைத்த கொத்துமல்லி விதை விழுது- 4 மேஜைக் கரண்டி
 12. சிகப்பு மிளகாய் விழுது - 3 மேஜைக் கரண்டி
 13. துருவிய இஞ்சி - 4 மேஜைக் கரண்டி
 14. துருவிய பூண்டு - 4 மேஜைக் கரண்டி
 15. சோம்பு தூள் - 2 மேஜைக் கரண்டி
 16. பச்சை மிளகாய் -6
 17. பிரியாணி இலை -4
 18. பட்டை- 4 துண்டுகள்
 19. லவங்கம் - 20
 20. சோம்பு - 4 மேஜைக் கரண்டி
 21. மல்லி மொக்கு - 4
 22. கல்பாசி - சிறிதளவு
 23. உப்பு தேவையான அளவு
 24. ஜாதிபத்திரி - சிறிதளவு
 25. பெரிய ஏலக்காய் - 4
 26. தக்காளி விழுது - 1/2 கப்
 27. எலுமிச்சை பழம் - 2
 28. பொதினா இலை - ஒரு கட்டு
 29. கறிவேப்பிலை - ஒரு கட்டு
 30. கொத்துமல்லி இலை - ஒரு கட்டு
 31. நல்லெண்ணெய் - 1/4 லிட்டர்
 32. நெய் - 1/2 கிலோ
 33. தயிர் 1 லிட்டர்
 34. ஏலக்காய் தூள் - 4 மேஜைக் கரண்டி
 35. குங்குமப்பூ - 6 சிட்டிகை
 36. முந்திரி - 100 கிராம்
 37. காய்ந்த திராட்சை - 50 கிராம்
 38. வறுத்த சேமியா - 1/2 கிலோ
 39. ரவை - 3/4 கிலோ
 40. சர்க்கரை - 1 கிலோ
 41. தேங்காய் அரைத்த விழுது - 1/2 கப்
 42. தேங்காய் பால் - 2 கப்

வழிமுறைகள்

 1. இட்லி செய்வதற்கு :
 2. இட்லி அரிசியை நன்கு கழுவி 6 மணி நேரம் ஊற வைக்கவும்..
 3. உளுந்தை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும் .
 4. பிறகு தனித்தனியாக அரைத்து உப்பு சேர்த்து பிசைந்து இரவு முழுதும் புளிக்க வைக்கவும்.
 5. மறு நாள் இட்லிகளாக வார்த்து எடுத்து வைக்கவும்.
 6. சாப்பாட்டு அரிசியை நன்கு கழுவி ஊற வைக்கவும்.
 7. ஒன்றுக்கு 11/2 மடங்கு தண்ணீர் ஊற்றி சாதம் வேக வைக்கவும்.
 8. கறி ௲ப் செய்வதற்கு :
 9. இறைச்சியை நன்கு கழுவி எலும்புகளை எடுத்து குக்கரில் சிறிது வெண்ணெய், சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கவும்.
 10. அதனுடன் 2 மேஜைக் கரண்டி சோம்பு, 2 பட்டை, 4 லவங்கம், இடித்த மிளகு சீரகம்,மஞ்சள் தூள்,நசுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து 6 விசில் வேக வைக்கவும்.
 11. விசில் அடங்கியவுடன் ௲ப்பை எடுத்து வைக்கவும்.
 12. கறி சுக்கா செய்வதற்கு :
 13. கறியை மஞ்சள் தூள்,கல் உப்பு சேர்த்து நன்கு கழுவவும்.
 14. அதில் இஞ்சி பூண்டு துருவல் 2 மேஜைக் கரண்டி சேர்த்து வதக்கவும்.
 15. நறுக்கிய சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 16. 2 மேஜைக் கரண்டி கரம் மசாலா தூள்,மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி சோம்பு தூள் சேர்த்து வதக்கவும்.
 17. வறுத்து அரைத்த கொத்துமல்லி விதை விழுது, சிகப்பு மிளகாய் விழுது,3 மேஜைக் கரண்டி மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
 18. நறுக்கிய கறி வேப்பிலை, கொத்துமல்லி இலை சேர்க்கவும்.
 19. நன்கு வதக்கி தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
 20. வெந்தவுடன் நறுக்கிய காய்ந்த மிளகாய் எண்ணெயில் வறுத்து சேர்க்கவும்.
 21. கறி சுக்கா தயார்.
 22. தேங்காய் பால் சாதம் செய்வதற்கு :
 23. பாசுமதி அரிசியை ஒரு முறை கழுவி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
 24. ஒரு குக்கரில் 4 மேஜைக் கரண்டி எண்ணெய், 4 மேஜைக் கரண்டி நெய் சேர்த்து காய் விடவும்.
 25. பிறகு பிரிஞ்சி இலை, பட்டை,லவங்கம்,மல்லி மொக்கு,ஏலக்காய்,சேர்த்து வதக்கவும்.
 26. இஞ்சி பூண்டு துருவல் சேர்த்து வதக்கவும்.
 27. பிறகு ஊற வைத்த அரிசி சேர்த்து வதக்கவும்.
 28. சிறிதாக நறுக்கிய புதினா,கொத்துமல்லி இலை சேர்க்கவும்.
 29. குங்குமப்பூ ஊற வைத்த பால்சேர்க்கவும்.
 30. ஒன்றுக்கு ஒரு பங்கு தண்ணீர், தேங்காய் பால் சேர்த்து வேக வைக்கவும்.
 31. தேங்காய்ப்பால் சாதம் தயார் .
 32. மட்டன் சால்னா செய்வதற்கு :
 33. எலும்புடன் கூடிய கறியை ஒரு குக்கரில் சிறிது வெண்ணெய், நல்லெண்ணெய்,உப்பு சேர்த்து வதக்கவும்.
 34. இஞ்சி,பூண்டு,4 பச்சை மிளகாய், 10 சிறிய வெங்காயம், 2 தக்காளி சேர்த்து நன்கு அரைக்கவும்.
 35. கறியுடன் இந்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.
 36. கொத்துமல்லி விதை,சிகப்பு மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.
 37. சிறிது எண்ணெயில் ஒரு மேஜைக் கரண்டி சோம்பு, 1 மேஜைக் கரண்டி மிளகு, ஒரு பச்சை மிளகாய்,1 கப் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
 38. வதங்கிய உடன் மைய அரைக்கவும் .
 39. அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.
 40. பிறகு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 5 விசில் வைக்கவும்.
 41. குக்கர் ஆவி அடங்கியவுடன் திறந்து தேங்காய் பால் சேர்த்து கலந்துவிடவும்.
 42. கொத்துமல்லி இலை சேர்த்து கலக்கவும்.
 43. மட்டன் சால்னா தயார்.
 44. ஒரு லிட்டர் பாலை நன்கு காய்ச்சி முதல் நாளே மிதமான ௲ட்டில் உரைக் குத்தி வைக்கவும்.
 45. சேமியா, ரவா பாத் செய்வதற்கு :
 46. சிறிது நெய்யில் சேமியாவை வறுத்து பதமாக வேக வைத்துக் கொள்ளவும்.
 47. 1/4 கப் நெய்யுடன் 3 மேஜைக் கரண்டி எண்ணெய் சேர்த்து ரவையை நன்கு வறுக்கவும்.
 48. மூன்று மடங்கு தண்ணீர் சேர்த்து சிறிது வேக விடவும்.
 49. பிறகு 11/2 மடங்கு சர்க்கரை சேர்த்து கிளறவும்.
 50. பாலில் ஊறவைத்த குங்குமப்பூ சேர்த்து கிளறவும்.
 51. நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை,பிஶ்தா, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.
 52. மீதி உள்ள எண்ணெயை சேர்த்து கிளறி இறக்கவும்.
 53. சுவையான சேமியா ரவா பாத் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்