வீடு / சமையல் குறிப்பு / PARTY DHAMAKA

Photo of PARTY DHAMAKA by Radha Balu at BetterButter
99
0
2.0(0)
0

PARTY DHAMAKA

Jan-15-2019
Radha Balu
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
180 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • டின்னெர் பார்ட்டி
 • தமிழ்நாடு
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. 1.மசாலா பாப்பட்
 2. பெரிய சைஸ் மிளகு அப்பளம் ..5
 3. வெங்காயம்..2
 4. பச்சை, சிவப்பு, மஞ்சள் குடை மிளகாய்..தலா1 
 5. துருவிய கேரட்
 6. சாட் மசாலா பொடி ..2டீஸ்பூன்
 7. ஓமப்பொடி..சிறிது
 8. எலுமிச்சை சாறு, உப்பு ..தேவைக்கேற்ப
 9. 2,3..சோலே பட்டூரா
 10. பட்டூரா விற்கு
 11. மைதா மாவு- 2 கப்
 12. தயிர்-- ½ கப்
 13. பால்- ¾ கப்
 14. எண்ணை-- 1 டேபிள்ஸ்பூன்
 15. சமையல்  சோடா-- 2சிட்டிகை
 16. உப்பு--- ½ தேக்கரண்டி
 17. எண்ணை---  வேகவிட
 18. 3.சோலேவிற்கு...
 19. வெள்ளை  கொண்டைக்கடலை---- 1 கப்
 20. பெரிய  வெங்காயம்--- 3
 21. தக்காளி--- 2
 22. பச்சை  மிளகாய்--- 2 இஞ்சி-- சிறுதுண்டு பூண்டு--- 5 பல்
 23. ஏலக்காய்--- 2 கிராம்பு--- 2 பட்டை--- சிறு துண்டு
 24. காரப்பொடி--- 2 தேக்கரண்டி
 25. எண்ணை--- 3  தேக்கரண்டி
 26. டால்டா--- 2 தேக்கரண்டி
 27. உப்பு--- தேவையான  அளவு
 28. 4.ஃப்ரூட் கேசரி
 29. ரவை - 1 கப்
 30. பொடியாக நறுக்கிய ஆப்பிள் - 1 /2 கப் திராட்சை - 50 கிராம்  அன்னாசி துண்டுகள்  - 1/4 கப் 
 31. சர்க்கரை - 1 1/4  கப் 
 32. நெய் - 1/2  கப் 
 33. முந்திரி - 10
 34. பால்  - 1/2 கப்
 35. தண்ணீர்  -  1 1/2 கப்
 36. ஏலப்பொடி - 2  சிட்டிகை குங்குமப்பூ - சில இதழ்கள்.
 37. 5.காரட் பாதாம் கீர்
 38. காரட்--- பெரிதாக 1
 39. பாதாம்--- 40
 40. முந்திரி--- 25
 41. சர்க்கரை--- 1 கப்
 42. பால்-- 1 லிட்டர்
 43. குங்குமப்பூ--- 10 இதழ்கள் ஏலக்காய்--- 8
 44. மேலே அலங்கரிக்க பாதாம், முந்திரி, திராட்சை
 45. 6.தயிர்வடை
 46. உளுத்தம்பருப்பு -- 1 கப் 
 47. பெருங்காயப்பொடி -- 1/4டீஸ்பூன் 
 48. புளிக்காத கெட்டித் தயிர் -- 1கப் 
 49. பால் -- 1/4 கப் 
 50. அரைக்க....   பச்சை மிளகாய் -- 2
 51. இஞ்சி -- ஒரு சிறு துண்டு 
 52. தேங்காய்த்துருவல் -- 1/4கப் 
 53. முந்திரிபருப்பு -- 8
 54. சீரகம் -- 1/2 தேக்கரண்டி 
 55. உப்பு --  தேவையான அளவு
 56. எண்ணை
 57. அலங்கரிக்க.... சீரகப்பொடி,  காரப்பொடி, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, பூந்தி ஒரு கப்.
 58. 7.பீஸ் பனீர் புலாவ்
 59. பச்சை பட்டாணி - 1/2 கப்
 60. பனீர் - 100 கிராம்
 61. சிறிய சதுரங்களாக வெட்டி எண்ணையில் இளஞ்சிவப்பாக பொரித்து வெதுவெதுப்பான நீரில் போட்டு வைக்கவும்.)
 62. பாசுமதி அரிசி - 1 கப்
 63. வெங்காயம், தக்காளி - ஒன்று
 64. நெய் - 3 டீஸ்பூன் 
 65. எண்ணெய் - 6 டீஸ்பூன் 
 66. தேங்காய்ப்பால் - 1/2 கப்
 67. மல்லி தழை - சிறிது
 68. உப்பு...தேவைக்கு
 69. அரைக்க: பச்சைமிளகாய் - 3 இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 6 பல்
 70. தாளிக்க பிரிஞ்சி இலை -2 கறிவேப்பிலை - சிறிது ஏலக்காய் - 2 கிராம்பு - 2 பட்டை - சிறு் துண்டு
 71. நெய் - 3 டீஸ்பூன்
 72. கரம் மசாலா - 1 டீஸ்பூன்
 73. முந்திரி, திராட்சை - தேவைக்கு
 74. 8.மிக்ஸட் வெஜிடபிள் குருமா
 75. பெரிய வெங்காயம், தக்காளி - தலா 2
 76. பச்சைப் பட்டாணி -1/2 கப்
 77. நறுக்கிய பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், கேரட்- தலா 1/2 கப்
 78. மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
 79. மிளகாய்த் தூள் -1 1/2  டீஸ்பூன்
 80. கரம் மசாலா - 1/2  டீஸ்பூன்
 81. எண்ணெய் - 5 டீஸ்பூன்
 82. அரைக்க.... தேங்காய்த் துருவல் - 1/4 கப் 
 83. முந்திரிப் பருப்பு -10 ( வெந்நீரில் ஊறவைக்கவும்.)
 84. பச்சை மிளகாய் -2
 85. சீரகம் - 1 டீஸ்பூன் 
 86. கிராம்பு, லவங்கப்பட்டை - 2 ஏலக்காய் - 2
 87. 9.பனானா லஸ்ஸி
 88. வாழைப்பழம் - 2
 89. புளிக்காத தயிர் - 3/4 கப் 
 90. பால் - 1 கப் 
 91. பனங்கற்கண்டு பொடி - 1/2 கப்
 92. ஏலப்பொடி - 1/4 டீஸ்பூன்
 93. குங்குமப்பூ - சில இதழ்கள்

வழிமுறைகள்

 1. 1.மசாலா பாப்பட் ----------------------
 2. முதலில் வெங்காயம், குடை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
 3. கேரட்டை துருவி வைத்துக்கொள்ளவும்.
 4. மசாலா பப்பட் பரிமாறுவதற்கு முன் மிளகு அப்பளத்தை மைக்ரோவேவ் அவனில் வைத்தோ (அ) அப்பளத்தின் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி தவாவில் ரோஸ்ட் செய்தோ எடுத்துக்கொள்ளவும்.
 5. ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை, சிகப்பு, மஞ்சள் மிளகாய் இவற்றை போட்டு இரண்டு சிட்டிகை உப்பு , எலுமிச்சம் பழ ரசம் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
 6. பரிமாறும் முறை... ரோஸ்ட் செய்த அப்பளத்தின் மேல் உப்பு, எலுமிச்சம்பழ ரசம் கலந்து வைத்துள்ள வெங்காயம், குடைமிளகாய் கலவையை பரவலாக தூவி அதன் மேல் கேரட் துருவலையும், சாட் மசாலா பொடியையும் தூவி கடைசியாக  ஓமப்பொடி மேலே உதிர்த்து உடனடியாக பரிமாறவும்.
 7. மேலும் மேலும் சாப்பிட தூண்டும் மற்றும் நினைத்த உடனே சுலபமாக செய்து சாப்பிட கூடிய இந்த ருசியான மசாலா பப்பட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே மிகவும் பிடித்த ஒரு ஸ்டார்ட்டர்.
 8. விருப்பபட்டால் வெள்ளரிக்காய், தக்காளி இவற்றையும் பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம். இந்த காய்கறிகளில் எல்லாம் நீரின் தன்மை அதிகம் இருப்பதினால் சாப்பிடுவதற்கு முன் அப்பளத்தின் மேல் தூவி உடனடியாக பரிமாறி விட
 9. 2,3.சோலே பட்டூரா -----------------------
 10. பட்டூராவிற்கு  கூறப்பட்டுள்ளவற்றை  ஒரு  பாத்திரத்தில்  போட்டு  நன்கு  அடித்துப்  பிசையவும். அதனை  மூன்று  மணி  நேரம்  காற்றுப்  புகாமல்  மூடி  வைக்கவும்.
 11. பிசைந்த மாவை மேலும் நன்கு அடித்துப் பிசைந்து, பூரியைவிட சற்று திக்கான பட்டூராக்களை இடவும்.
 12. எண்ணையில்  பொரித்து  எடுத்து,  சன்னாவுடன்  பரிமாறவும்.
 13. 3..சோலே(சன்னா) --------–--------------- கொண்டைக் கடலையை 12 மணி நேரம் நீரில் ஊற வைத்து, குக்கரில் தேவையான தண்ணீர் சேர்த்து 5, 6 சத்தம் வரும் வரை வேக விடவும்.
 14. வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, ஏலம், கிராம்பு, பட்டை எல்லாம் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
 15. வாணலியில்  எண்ணையும்டால்டாவும்  சேர்த்து  வைத்து  அதில்  அரைத்த  விழுதை  எண்ணை  பிரிய  வதக்கவும்.  அதில்  தேவையான  உப்பு,  காரப்பொடி  சேர்க்கவும்.
 16. வெந்த கொண்டைக் கடலையை கரண்டியால் சற்று மசிக்கவும். வேகவைத்த நீரை வீணடிக்காமல் கடலையுடன் சேர்த்து வதக்கிய விழுதில் விடவும்.
 17. நன்கு  சேர்ந்து  கொண்டு  கெட்டியானதும்  இறக்கவும். மேலே  பொடியாக   நறுக்கிய  கொத்தமல்லி  தழை,எண்ணையில்  வதக்கிய  பச்சை  மிளகாய்  சேர்க்கவும். சன்னா  தயார்.பட்டூராவுடன் பரிமாறவும்.
 18. 4.ஃப்ரூட் கேசரி --------------------
 19. ஆப்பிள்,  திராட்சையை  சிறு  துண்டுக ளாக்கவும்.அவற்றை 1/2 கப் சர்க்கரையுடன் கலந்து வைக்கவும்.
 20. முதலில் ஒரு மேஜை கரண்டி நெய் விட்டு  முந்திரி வறுத்து எடுத்து  ரவையை  சற்று சிவக்க வறுக்கவும்.
 21. அதில் பால் மற்றும் தண்ணீரை சேர்க்கவும். தண்ணீரை கொதிக்க வைத்துக்கொள்ளவும்.இல்லையெனில் கட்டி தட்டிவிடும். கிளறுவது கஷ்டம்.
 22. ரவை நன்றாக வெந்த பிறகு சர்க்கரை மற்றும் பழங்களை சேர்த்து 5 நிமிடம் கிளறவும். எல்லாம் சேர்ந்து கொண்டு கெட்டியானதும், நெய்யை விட்டுக் கிளறவும்.
 23. பாத்திரத்தில் ஒட்டாமல் வந்தபின் குங்குமப்பூ, ஏலப்பொடி,வறுத்த முந்திரி  சேர்த்து கிளறவும்.இதற்கு கேசரி பவுடர் சேர்க்க தேவையில்லை.
 24. இதில் மாம்பழம், பலாப்பழம் இருந்தாலும் தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி சேர்க்க சுவை அருமையாக இருக்கும்.
 25. சுவையான  ஃப்ரூட் கேசரி ரெடி. பார்ட்டிகளுக்கு ஏற்ற இனிப்பு இது.
 26. 5.காரட் பாதாம் கீர் ------------------------
 27. பாதாம், முந்திரியை வென்னீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து பாலை விட்டு, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
 28. காரட்டை துருவி சிறிது பாலுடன் சேர்த்து குக்கரில் வேகவிடவும். ஆறியதும் மிக்ஸியில் நைஸாக அரைத்து, பாதாம், முந்திரி விழுதும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
 29. பாலை 3/4 லிட்டர் ஆகும்வரை காய்ச்சவும். அதில் அரைத்த விழுது, சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும். இல்லையெனில் அடியில் பிடித்துவிடும்.
 30. பாலும், விழுதும் சேர்ந்துகொண்டதும் இறக்கவும்.மேலே குங்குமப்பூ இதழ்களை சேர்க்கவும்.ஏலக்காயைப் பொடி செய்து போடவும்.
 31. குளிர வைத்து கப்புகளில் பரிமாறும்போது, மெலிதாகச் சீவிய பாதாம், மிந்திரி, மற்றும் காய்ந்த திராட்சை சேர்க்கவும். ரிச்சான இந்த பாயசம் பார்ட்டிகளுக்கு ஏற்றது.
 32. 6.தயிர்வடை -----------------
 33. உளுத்தம்பருப்பைக் களைந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.  தண்ணீரை வடித்துவிட்டு நைசாக, கெட்டியாக அரைக்கவும். கடைசியில் உப்பு,  பெருங்காயப்பொடி சேர்த்து கலந்து  எடுக்கவும்.
 34. அரைக்க கொடுத்துள்ள பச்சை மிளகாய் முதல் சீரகம் வரை உள்ளவற்றை நைசாக அரைத்து,தேவையான உப்பு, தயிர் சேர்த்து மேலும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். பாலை சேர்க்கவும்.
 35. எண்ணையைக் காயவைத்து, வடைகளைத் தட்டி  வெதுவெதுப்பான நீரில் ஒரு நிமிடம் போட்டு,கலந்து வைத்துள்ள தயிர்க் கலவையில் போடவும். ஊறியதும் எடுத்து வேறு தட்டில் வைக்கவும்.
 36. மேலே அலங்கரிக்கக் கொடுத்துள்ளவற்றை வரிசையாகத் தூவி பரிமாறவும். விருப்பமுள்ளவர்கள் மேலே சாட்மசாலா தூவிக் கொள்ளலாம். இதை ஃ ப்ரிட்ஜில் வைத்து சாப்பிட சுவை கூடும்.
 37. 7.பீஸ் பனீர் புலாவ் –------------------------
 38. காய்ந்த பட்டாணியாக இருந்தால் இரவே ஊற வைத்துக் கொள்ளவும். பச்சைப் பட்டாணி என்றால் உடனடியாக சமைக்கலாம்.
 39. பாசுமதி அரிசியைக் களைந்து நீரை வடிய வைத்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
 40. வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
 41. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.
 42. அதனுடன் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கி பட்டாணியும் சேர்த்து நன்கு வதக்கவும்.
 43. அதில் அரைத்த மசாலாவை போட்டு பச்சை வாசனை போக வதக்கி தேங்காய்ப் பாலுடன், மேலும் 3/4 கப் நீர் சேர்த்து, உப்பு சேர்த்து குக்கரை மூடி, ஆவி வந்ததும் வெய்ட் போடவும்.
 44. கேஸை சிம்மில் வைத்து 10  நிமிடம் வைத்திருந்து அணைக்கவும்.மூடியை திறந்துபனீர் துண்டுகளை சேர்க்கவும்.
 45. நெய்யில் மிந்திரி, திராட்சை, கரம் மசாலா சேர்த்து வதக்கி புலாவில் சேர்க்கவும்.
 46. நறுக்கிய கொத்துமல்லி தழை சேர்த்து ஒரு முறை அடி வரை கிளறி விட்டு பின் பரிமாறவும். சுவையான பீஸ் பனீர் புலாவ் ரெடி.
 47. 8.மிக்ஸட்வெஜிடபிள்குருமா ------------------------------------
 48. காய்கறிகளை தேவையான நீரில் வேக வைக்கவும். நீரை வடியவைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
 49. தேங்காய், சீரகம், முந்திரிப் பருப்பு, சீரகம், ப.மிளகாய், கிராம்பு, லவங்கப்பட்டை ஏலம் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக்கொள்ளவும். 
 50. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும், இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி துண்டுகள் சேர்த்து நன்கு வதக்கவும். 
 51. அத்துடன் அரைத்த விழுது சேர்த்து வதக்கி, கெட்டியானதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறவும்.தயிர் சேர்த்து நன்கு வதக்கவும்.
 52. வெந்த காய்கறிகள் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து வேகவைத்த நீர் சேர்த்து கிளறவும். சற்று கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.கொத்துமல்லி சேர்த்து, புலாவுடன் பரிமாறவும்.
 53. 9.பனானா லஸ்ஸி -----------------------
 54. அனைத்து பொருள்களையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அடிக்கவும்.லஸ்ஸி கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
 55. இதை ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து பரிமாறவும்.
 56. பரிமாறும் முன்பு ஏலப்பொடி, குங்குமப்பூ போட்டால் பார்க்க அழகாகவும், சுவை அபாரமாகவும் இருக்கும்.
 57. மிக்சியில் அடிக்கும் போது இவற்றுடன் ஐஸ் கட்டிகள் சேர்த்து அடித்தால் உடனே பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்