வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் அரைத்த குழம்பு

Photo of Coconut masala gravy by Priya Suresh at BetterButter
437
0
0.0(0)
0

தேங்காய் அரைத்த குழம்பு

Jan-16-2019
Priya Suresh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் அரைத்த குழம்பு செய்முறை பற்றி

காரசாரமான தேங்காய் மசாலா அரைத்து ஊற்றி செய்த குழம்பு..

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 2கப் காய்கறிகள்
  2. 1 கப் புளிக்கரைசல்
  3. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 1 டீஸ்பூன் கடுகு
  5. கறிவேப்பிலை சிறிதளவு
  6. 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  7. வறுத்தரைக்க:
  8. 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  9. 1டீஸ்பூன் வெந்தயம்
  10. 4 காய்ந்த மிளகாய்
  11. 1கப் தேங்காய் துருவல்

வழிமுறைகள்

  1. உளுத்தம்பருப்பு ,வெந்தயம், காய்ந்த மிளகாய் அனைத்தையும் சிறு தீயில் வைத்து நன்றாக வாசம் வர வறுத்துக்கொள்ளவும்
  2. வறுத்த உளுத்தம்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தேங்காய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  3. தேவையான எண்ணெயை வாணலியில் ஊற்றி கடுகை வெடிக்க விட்டு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  4. அதில் காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. புளிக்கரைசலில் உப்பு மஞ்சள்தூள் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  6. வதக்கிய காயுடன் புளிக்கரைசலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
  7. காய்கள் ஓரளவு வெந்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விடவும்
  8. குழம்புக்கு தேவையான தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
  9. சிறிய தீயில் இட்டு குழம்பை நன்றாக கொதிக்க விடவும்
  10. குழம்பில் இருந்து எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை நிறுத்தி சூடாக சாதத்துடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்