வீடு / சமையல் குறிப்பு / புதினா புளிக்குழம்பு

Photo of Mint leaves Pulikuzhambu by Muthulakshmi Madhavakrishnan at BetterButter
248
0
0.0(0)
0

புதினா புளிக்குழம்பு

Jan-20-2019
Muthulakshmi Madhavakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புதினா புளிக்குழம்பு செய்முறை பற்றி

புதினா புளிக்குழம்பு மிகவும் சுலபமாக செய்திடலாம். குளிர்காலங்களில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சின்ன வெங்காயம் - 10
  2. பூண்டு பற்கள் - 10
  3. புதினா - 1 கட்டு
  4. புளி - சிறிய எலுமிச்சை அளவு
  5. மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
  6. தனியா தூள் - 1 டீஸ்பூன்
  7. பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
  8. வெல்லம் - சிறிய துண்டு
  9. வெள்ளை எள் - 1 டீஸ்பூன்
  10. உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
  11. மிளகாய் வற்றல் - 1
  12. வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
  13. நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
  14. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. புளியை சூடான நீரில் போட்டு 20 நிமிடங்கள் ஊறவைத்து பின் கெட்டியாக கரைத்து கொள்ளவும்.சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை தோலுரித்துக் கொள்ளவும்.
  2. வாணலியை சூடாக்கி அதில் வெள்ளை எள், உளுத்தம்பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளவும். பின் ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
  3. கனமான கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பூண்டு பற்களை சேர்த்து லேசாக வதக்கவும்.
  4. பின் புதினா இலைகள் சேர்த்து கைவிடாமல் நன்கு வதக்கவும்.
  5. புதினா நன்கு சுருண்டு வதங்கியதும் புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  6. புளிக்கரைசல் கொதிக்க ஆரம்பித்ததும் மிளகாய்தூள், தனியா தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்‌.
  7. குழம்பு சிறிது கெட்டியாகும் போது பொடித்தவற்றை சேர்த்து நன்கு கலந்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.
  8. பின் பொடித்த வெல்லம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து லேசாக கொதித்ததும் இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்