வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் மசாலா

Photo of Restaurant style paneer masala by Lalitha Ananth at BetterButter
498
1
0.0(0)
0

பன்னீர் மசாலா

Jan-26-2019
Lalitha Ananth
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் மசாலா செய்முறை பற்றி

இந்த மாதிரி பன்னீர் மசாலா செஞ்சு பாருங்க பூரி நாண் சப்பாத்தி எல்லாத்துக்கும் நல்லா இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • இந்திய
  • ஃபிரையிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பன்னீர் ஒரு கப்
  2. வெங்காயம் ஒரு கப்
  3. மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  4. மல்லித்தூள் 3 டேபிள்ஸ்பூன்
  5. கரம் மசாலா தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  6. சோள மாவு ஒரு ஸ்பூன்
  7. மைதா ஒரு ஸ்பூன்
  8. தக்காளி ப்யூரி ஒரு கப்
  9. வெங்காய விழுது அரை கப்
  10. இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள்ஸ்பூன்
  11. பூண்டு 4 பல்
  12. பட்டை 1 கிராம்பு 2 அன்னாசி பூ 1
  13. சோம்பு ஒரு ஸ்பூன்
  14. கருவேப்பிலை தேவையான அளவு
  15. பச்சை மிளகாய் ஒன்று
  16. கொத்தமல்லி தேவையான அளவு
  17. வெண்ணெய் தேவையான அளவு
  18. உப்பு தேவையான அளவு
  19. கஸ்தூரி மேத்தி ஒரு டேபிள்ஸ்பூன்
  20. தயிர் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பன்னீருடன் சோள மாவு மைதா மாவு மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  2. பன்னீரை மாவுடன் நன்கு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
  3. அரைமணிநேரம் பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பன்னீரை பொரித்து எடுக்கவும்
  4. பன்னீர் நன்கு சிவந்து வரும் வரை வறுத்து எடுக்கவும்
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசி பூ வெங்காயம் வெங்காய விழுது கறிவேப்பிலை சோம்பு பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  6. வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி ப்யூரி சேர்க்கவும்
  7. தக்காளி ப்யூரி வதங்கியவுடன் மிளகாய் தூள் மல்லித்தூள் கரம் மசாலாத்தூள் கஸ்தூரி மேத்தி சேர்த்து வதக்கவும்
  8. ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து வதக்கவும்
  9. மசாலா வதங்கியவுடன் பொரித்து வைத்துள்ள பன்னீர் சேர்க்கவும்
  10. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்
  11. ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்
  12. 5 நிமிடம் கழித்து கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்
  13. இப்பொழுது சுவையான பன்னீர் மசாலா ரெடி
  14. veg rice ரைத்தா பன்னீர் மசாலா சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்