BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கோபி சென்னா கிரேவி

Photo of Gobi chenna grevi by sudha rani at BetterButter
0
0
0(0)
0

கோபி சென்னா கிரேவி

Jan-27-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கோபி சென்னா கிரேவி செய்முறை பற்றி

சப்பாத்திக்கு ஏற்ற கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. காலிஃபிளவர் 1 மீடியம் சைஸ்
  2. வெள்ள சுண்டல் 150 கிராம்
  3. நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் 2
  4. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. பச்சை மிளகாய் 3
  7. கறிவேப்பிலை சிறிது
  8. கொத்தமல்லி தழை சிறிது
  9. எண்ணெய் 8 டேபிள்ஸ்பூன்
  10. கடுகு 1 ஸ்பூன்
  11. பிரியாணி இலை 2
  12. மசாலா அரைக்க:
  13. பட்டை 2
  14. கிராம்பு 2
  15. ஏலக்காய் 2
  16. சோம்பு 1 ஸ்பூன்
  17. தேங்காய் துருவல் 1 கப்
  18. தக்காளி 6
  19. பொட்டுக்கடலை 2 ஸ்பூன்
  20. மல்லித்தூள் 1 ஸ்பூன்
  21. சீரகத்தூள் 1 ஸ்பூன்
  22. கறிமசால் தூள் 2 ஸ்பூன்
  23. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவர் ஐ சின்ன சின்ன பூவாக நறுக்கி உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரில் 10 நிமிடங்கள் வரை ஊறவிடவும்
  2. பின் நன்கு அலசி எடுக்கவும்
  3. சுண்டலை முதல் நாள் இரவே ஊற வைத்து பின் நன்கு அலசி சிறிது உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும்
  4. மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி பின் அரைத்து எடுக்கவும்
  5. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு பிரியாணி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  6. பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  7. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  8. பின் அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
  9. பின் வேகவைத்த சுண்டல் மற்றும் காலிஃப்ளவர் ஐ சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
  10. நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்