வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்ப்பால் மாங்காய் கரி கேரளா ஸ்பெஷல்

Photo of Coconut milk mango curry Kerala special by Sarojam Arumugam at BetterButter
320
1
0.0(0)
0

தேங்காய்ப்பால் மாங்காய் கரி கேரளா ஸ்பெஷல்

Jan-28-2019
Sarojam Arumugam
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்ப்பால் மாங்காய் கரி கேரளா ஸ்பெஷல் செய்முறை பற்றி

சூடான சாதத்துடன் இந்தக் கரி இருந்தாள் வேறு ஏதும் தேவை இல்லை

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சின்ன வெங்காயம் 15 எண்ணம்
  2. புளி இல்லாத மாங்காய் துண்டுகள் 8 எண்ணம்
  3. மிளகாய்த்தூள் 4 தேக்கரண்டி
  4. மல்லித்தூள் 2 தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
  6. புலி ஒரு நெல்லிக்காய் அளவு
  7. கருவேப்பிலை
  8. பச்சை மிளகாய் 2எண்ணம்
  9. கட்டித் தேங்காய்ப்பால் தேங்காயில் இருந்து எடுத்தது
  10. இரண்டாவது தேங்காய்ப் பால் ஒரு கப்
  11. கடுகு அரை தேக்கரண்டி
  12. வெந்தயம் கால் தேக்கரண்டி
  13. தேங்காய் எண்ணெய் 2 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. மாங்கா துண்டுகளில் அரை தேக்கரண்டி மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கலந்து 15 நிமிடம் வைக்கவும்
  2. ஒரு கடாயில் 10 சின்ன வெங்காயம் நறுக்கியது நறுக்கின பச்சை மிளகாய் நசுக்கிய இஞ்சி துண்டு மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி விரல்களால் வெங்காயத்தை அத்துடன் நசுக்கி கலந்து கொள்ள வேண்டும்
  3. நன்றாக நசுக்கி கலந்த கலவையில் இரண்டாம் தேங்காய்ப்பால் ஊற்றி கொதிக்க வைக்கவும்
  4. கொதித்ததும் மாங்காய் துண்டுகளை சேர்த்து வேக வைக்கவும்
  5. இதில் புலி கலந்து சுவைத்துப் பார்க்கவும்
  6. அத்துடன் மீதமிருக்கும் பொடிகளை கலந்து கொதிக்க வைத்து கெட்டியானதும் கெட்டி தேங்காய்ப் பாலை ஊற்றி கலக்கி கொதிக்க வைக்காமல் இறக்கவும்
  7. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் கருவேப்பிலை போட்டு தாளித்து இதில் சேர்க்கவும்
  8. சுடு சாதத்துடன் சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்