Photo of Carrot rice by sudha rani at BetterButter
239
0
0.0(0)
0

கேரட் ரைஸ்

Jan-28-2019
sudha rani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் ரைஸ் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பும் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உதிராக வடித்த சாதம் 2 கப்
  2. கேரட் 6
  3. வெங்காயம் 3
  4. எண்ணெய் 6 டேபிள்ஸ்பூன்
  5. நெய் 4 டேபிள்ஸ்பூன்
  6. பிரியாணி இலை 2
  7. பட்டை 2
  8. கிராம்பு 2
  9. ஏலக்காய் 2
  10. கடுகு 1 ஸ்பூன்
  11. பூண்டு 4 பல்
  12. தேங்காய் துருவல் 1/2 கப்
  13. உப்பு தேவையான அளவு
  14. கறிவேப்பிலை சிறிது
  15. கொத்தமல்லி தழை சிறிது
  16. பச்சை மிளகாய் 4
  17. லெமன் சாறு 2 ஸ்பூன்
  18. வறுத்து பொடிக்க:
  19. சீரகம் 2 ஸ்பூன்
  20. கொத்தமல்லி விதை 2 ஸ்பூன்
  21. வரமிளகாய் 8
  22. மிளகு 1/2 ஸ்பூன்
  23. சோம்பு 1 ஸ்பூன்
  24. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  25. கொப்பரை தேங்காய் துருவல் 1/4 கப்
  26. அலங்கரிக்க:
  27. நெய்யில் வறுத்த முந்திரி 15
  28. உடைத்து வறுத்த வேர்க்கடலை 1 கைப்பிடி
  29. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. சாதத்தை உதிராக வடித்து தாம்பாளத்தில் மாற்றி லேசாக எண்ணெய் விட்டு பிரட்டி பின் பரப்பி ஆறவிடவும்
  2. கேரட்டை துருவி வைக்கவும்
  3. வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை சீரகம் மிளகு மல்லி விதை சோம்பு பெருங்காயத்தூள் சேர்த்து வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து எடுக்கவும்
  4. பின் எண்ணெய் விட்டு வரமிளகாய் தேங்காய் துருவல் வறுத்து மிளகு சீரகம் சோம்பு உடன் சேர்த்து நன்கு பொடித்து வைக்கவும்
  5. வாணலியில் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் பட்டை பிரியாணி இலை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வெடிக்க விடவும்
  6. பின் கடுகு சேர்த்து வெடிக்க விட்டு கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  7. பின் நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  8. பின் துருவிய கேரட் சேர்த்து மிதமான தீயில் வைத்து நிதானமாக வதக்கவும்
  9. பின் சாதத்தை சேர்த்து உடன் வறுத்து பொடித்த பொடி மற்றும் உப்பை பரவலாக தூவி நன்கு கிளறவும்
  10. பின் மீதி நெய் விட்டு கொத்தமல்லி தழை தூவி 2 நிமிடங்கள் வரை மூடி வைத்து பின் இறக்கவும்
  11. இறக்கிய பின் லெமன் சாறு பிழிந்து நன்கு கிளறவும்
  12. மேல முந்திரி வேர்க்கடலை கொத்தமல்லி தழை தூவி விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்