Photo of Murukku by sudha rani at BetterButter
406
0
0.0(0)
0

முறுக்கு

Jan-28-2019
sudha rani
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

முறுக்கு செய்முறை பற்றி

தை பொங்கல் என்றால் முறுக்கு சுடாத வீடே இருக்காது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. தரமான பொன்னி அரிசி 1 கிலோ
  2. பாசிப்பருப்பு 100 கிராம்
  3. பொட்டுக்கடலை 100 கிராம்
  4. கடலைப்பருப்பு 50 கிராம்
  5. எள்ளு 2 ஸ்பூன்
  6. ஓமம் 2 ஸ்பூன்
  7. சீரகம் 2 ஸ்பூன்
  8. வரமிளகாய் 8

வழிமுறைகள்

  1. அரிசியை நன்கு 2 முறை அலசி பின் 3 மணி நேரம் வரை ஊறவிடவும்
  2. வரமிளகாயை தனியாக ஊறவிடவும்
  3. கடலைப்பருப்பு மற்றும் பாசிப்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து ஆறியதும் பொட்டுக்கடலை உடன் சேர்த்து பொடிக்கவும்
  4. பின் கிரைண்டரில் நன்கு தண்ணீர் வடித்த அரிசி ஐ போட்டு நன்கு நைசாக அரைத்து எடுக்கவும்
  5. ஊறவைத்த வரமிளகாய் உடன் சீரகம் கறிவேப்பிலை ஓமம் பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு நைசாக அரைத்து எடுக்கவும்
  6. இப்போது அரைத்த அரிசி மாவுடன் உப்பு அரைத்த விழுது மற்றும் பொடித்த பொடியை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  7. பின் சூடான நெய் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்
  8. பின் முள்ளு முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி மாவை நிரப்பி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  9. என்னதான் அரிசி மாவு மற்றும் கடலைமாவு சேர்த்து முறுக்கு செய்தாலும் இந்த அரிசியை ஆட்டி பின் கலந்து செய்யற முறுக்கு தனி ருசி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்