வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்பால் முட்டை கிரேவி

Photo of Spicy Egg Drop Gravy by Sumaiya shafi at BetterButter
187
0
0.0(0)
0

தேங்காய்பால் முட்டை கிரேவி

Jan-29-2019
Sumaiya shafi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்பால் முட்டை கிரேவி செய்முறை பற்றி

தேங்காய்ப்பால் கொட்டிய முட்டை கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை 5
  2. வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது
  3. தக்காளி 1 பொடியாக நறுக்கியது
  4. கறிவேப்பிலை சிறிதளவு
  5. காஷ்மீரி மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  6. குழம்பு மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  7. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  8. தேங்காய்ப்பால் 2 கப்
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. பச்சைமிளகாய்-2
  11. மல்லி இலை சிறிதளவு
  12. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  13. எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கருவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  3. பின் தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்
  4. உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்
  5. பின் தேங்காய்ப்பாலில் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து ஊற்றவும்
  6. மசாலா நன்கு கொதித்த பிறகு முட்டையை ஒன்றன்பின் ஒன்றாக உடைத்து ஊற்றவும்
  7. பின் சிம்மில் வைத்து 10 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்
  8. கடைசியில் மல்லி இலை சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்