வீடு / சமையல் குறிப்பு / நவதானிய சத்து மாவு தோசை

Photo of Navathaniya healthy dosa by Lalitha Ananth at BetterButter
2277
0
0.0(0)
0

நவதானிய சத்து மாவு தோசை

Jan-31-2019
Lalitha Ananth
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நவதானிய சத்து மாவு தோசை செய்முறை பற்றி

நவதானிய சத்து மாவில் தோசை புட்டு கொழுக்கட்டை இது எல்லாத்துக்கும் அந்த மாவை வைத்து செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை ஒரு கப்
  2. கேப்பை ஒரு கப்
  3. வெள்ளை சுண்டல் ஒரு கப்
  4. பொட்டுக்கடலை ஒரு கப்
  5. பாசிப்பயறு ஒரு கப்
  6. புழுங்கலரிசி ஒரு கப்
  7. வேர்க்கடலை அரை கப்
  8. கடலைப்பருப்பு அரை கப்
  9. கருப்பு உளுந்து கால் கப்
  10. பிஸ்தா கால் கப்
  11. முந்திரி அரை கப்

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் கோதுமை சேர்த்து சிவக்கும் வரை வறுத்து எடுக்கவும்
  2. கேப்பை சேர்த்து சிவந்து வரும் வரை வறுத்து எடுக்கவும்
  3. வெள்ளை சுண்டல் சேர்த்து சிவந்து வரும் வரை வறுக்கவும்
  4. பொட்டுக்கடலை வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும்
  5. பாசிப்பயறு கருப்பு உளுந்து சேர்த்து வறுத்து எடுக்கவும்
  6. கடலைப்பருப்பை சேர்த்து சிவந்து வரும் வரை வறுக்கவும்
  7. புழுங்கல் அரிசி சேர்த்து பொரிந்து வரும் வரை வறுத்து எடுக்கவும்
  8. முந்திரி பிஸ்தா சேர்த்து வறுத்து எடுக்கவும்
  9. வருத்த தானியங்களை சேர்த்து ஆற வைக்க வேண்டும்
  10. வருத்த தானியங்களை கொடுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
  11. அரைத்த மாவில் சிறிதளவு தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு ரெடி பண்ணிக் கொள்ளவும்
  12. தோசைக்கல் காய்ந்தவுடன் தோசை ஊற்றவும்
  13. ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவும்
  14. நவதானிய சத்து மாவு தோசை ரெடி
  15. தோசையே சாம்பாருடன் வைத்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்