வீடு / சமையல் குறிப்பு / முளைகட்டிய சிறுதானிய இட்லி

Photo of Sprouted millet idli by Surya Rajan at BetterButter
733
0
0.0(0)
0

முளைகட்டிய சிறுதானிய இட்லி

Feb-05-2019
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முளைகட்டிய சிறுதானிய இட்லி செய்முறை பற்றி

முளைகட்டிய கம்பு கேப்பை பச்சைப்பயிறு இட்லி..... சிறுதானியங்கள் தமிழர்களின் பாரம்பரிய உணவு... ஆரோக்கிய உணவு....அவற்றை முளைகட்டி பயன்படுத்துவது கூடுதல் பலனை தரும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேழ்வரகு ஒரு கப்
  2. கம்பு ஒரு கப்
  3. பச்சைப்பயறு ஒரு கப்
  4. உப்பு சிறிதளவு
  5. இட்லி மாவு தயாரிப்பதற்கு
  6. இட்லி அரிசி 2 கப்
  7. உளுந்து அரை கப்
  8. வெந்தயம் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. இட்லி மாவு தயாரிப்பதற்கு கொடுக்கப்பட்ட பொருள்களில்....அரிசி மற்றும் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும் .. உளுந்தினை தனியாக 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின் அவற்றை தனித்தனியாக அரைத்து எடுத்து ஒன்றாக கலந்து கொள்ளவும்
  3. தானியங்களை தனித்தனியாக கழுவி 6 மணி நேரம் ஊற வைக்கவும்
  4. பின் அவற்றின் தண்ணீரை நன்றாக வடித்து விட்டு தனித்தனியாக ஹாட் பேக்கில் 12 மணிநேரம் வைக்கவும்
  5. 12 மணி நேரத்திற்குப் பிறகு அவை முளை கட்டி விடும்
  6. பின் அவற்றை தனித்தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  7. ஒரு கப் கேழ்வரகு மாவிற்கு (அதேபோல் கம்பு மாவு... பச்சைப்பயிறு மாவு..) ஒரு கப் அரைத்த இட்லி மாவினை கலந்து 6 மணி நேரம் புளிக்க வைக்கவும்
  8. ஆறு மணி நேரத்திற்கு பிறகு அவை நன்றாக இரு மடங்காக உயர்ந்து விடும்
  9. பின் அவற்றுடன் தேவையான உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  10. பின் அதனை இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி 15 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்
  11. ஒரு கப் கேழ்வரகு மாவு ஒரு கப் கம்பு மாவு ஒரு கப் அரிசி மாவு ஒரு கப் இட்லி மாவு கலந்து தோசைகளாகவும் வார்க்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்