வீடு / சமையல் குறிப்பு / பருப்பு பாயசம்

Photo of Dal payasam by sudha rani at BetterButter
270
0
0.0(0)
0

பருப்பு பாயசம்

Feb-05-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பருப்பு பாயசம் செய்முறை பற்றி

புரோட்டின் மற்றும் இரும்பு சத்து நிறைந்த ஒரு டெஸர்ட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப்பருப்பு 1 கப்
  2. கடலைப்பருப்பு 1 கப்
  3. வெல்லம் 2-1/2 கப்
  4. அரிசி 1 ஸ்பூன்
  5. தேங்காய் துருவல் 1/4 கப்
  6. நெய் 2 ஸ்பூன்
  7. முந்திரி 10
  8. திராட்சை 10
  9. ஏலக்காய் 6
  10. உப்பு 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பு மற்றும் பாசிப்பருப்பை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து சுமார் ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
  2. அரிசியை நன்கு கழுவி சுமார் ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
  3. குக்கரில் ஊறவைத்த பருப்பை சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும்
  4. அரிசியை தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் உடன் சேர்த்து நன்கு அரைத்து ஒரு மஸ்லின் துணியில் வடிகட்டி வைக்கவும்
  5. வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விட்டு இளம் பாகு பதம் வந்ததும் இறக்கவும்
  6. பின் வெந்த பருப்பு உடன் வெல்ல பாகு சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  7. பின் வடிகட்டி வைத்துள்ள தேங்காய் அரிசி பாலை சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  8. பின் நெய் விட்டு சூடானதும் முந்திரி திராட்சை வறுத்து கொதிக்கும் பாயசத்தில் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்
  9. இறக்குவதற்கு முன் சிறிது உப்பு சேர்த்து இறக்கவும் இனிப்பு சுவை சற்று தூக்கலாக தெரியும்
  10. சுவையான ஆரோக்கியமான பருப்பு பாயசம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்