வீடு / சமையல் குறிப்பு / நெய் முருங்கைக்கீரை தேங்காய் லட்டு

Photo of Ghee Drumstick Leaves Coconut Laddu by Bena Aafra at BetterButter
558
1
0.0(0)
0

நெய் முருங்கைக்கீரை தேங்காய் லட்டு

Feb-16-2019
Bena Aafra
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நெய் முருங்கைக்கீரை தேங்காய் லட்டு செய்முறை பற்றி

முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து உள்ளது.குழந்தைகளுக்கு இவ்வாறு தொக்கு போல் செய்து கொடுத்தால் சாப்பிடாத குழந்தைகளும் சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முருங்கைக்கீரை-1கப்
  2. தேங்காய் துருவல்-1கப்
  3. வெல்லம்-1கப்
  4. ஏலக்காய் தூள்-1/2ஸ்பூன்
  5. நெய் -3ஸ்பூன்
  6. பாதாம் -8
  7. முந்திரி-8
  8. பிஸ்தா-8

வழிமுறைகள்

  1. முதலில் முருங்கைக்கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. அவற்றை நெய்யில் வதக்கி பொடித்து கொள்ளவும் .
  3. அல்லது மிக்ஸியில் ஒரு அடி அடித்து கொள்ளவும்.
  4. மற்றொரு பாத்திரம் அடுப்பில் வைத்து நெய் விட்டு முந்திரி ,பாதாம் ,பிஸ்தா சேர்த்து வறுக்கவும்.
  5. அவற்றில் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும்.
  6. அடுப்பை சிம்மில் வைத்து கொள்ளவும்.
  7. ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும் .
  8. அவற்றுடன் வெல்லம் சேர்த்து கிளறிவிடவும்.
  9. கடைசியாக நெய் ஒரு ஸ்பூன் விட்டு இறக்கவும்.
  10. அவற்றை லட்டு போல் பிடித்து பரிமாறவும்.
  11. அவற்றின் மேலும் நட்ஸ் தூவிவிட்டு பரிமாறவும் .
  12. குழந்தைகளுக்கு இவ்வாறு செய்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்