வீடு / சமையல் குறிப்பு / மிளகு சீரக ரசம்

Photo of Pepper Jeera Rasam by Sowmya Sundar at BetterButter
0
1
0(0)
0

மிளகு சீரக ரசம்

Feb-19-2019
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிளகு சீரக ரசம் செய்முறை பற்றி

மிளகு சீரகம் வறுத்து சேர்த்து செய்த ரசம். ஜலதோஷம் , காய்ச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணம். வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • తమిళనాడు
  • మిళితం
  • ఉడికించాలి
  • మితముగా వేయించుట
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புளி எலுமிச்சை அளவு
  2. உப்பு ருசிக்கேற்ப
  3. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  4. பெருங்காயம் அரை டீஸ்பூன்
  5. நல்லெண்ணெய் 1/2 டீஸ்பூன்
  6. வறுத்து அரைக்க:
  7. துவரம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன்
  8. மல்லி விதை 1 டீஸ்பூன்
  9. மிளகு ஒரு டீஸ்பூன்
  10. சீரகம் ஒரு டீஸ்பூன்
  11. மிளகாய்வற்றல் 1
  12. தாளிக்க :
  13. நெய் ஒரு டீஸ்பூன்
  14. கடுகு, சீரகம் தலா அரை டீஸ்பூன்
  15. கறிவேப்பிலை சிறிதளவு
  16. மிளகாய்வற்றல் 1

வழிமுறைகள்

  1. வாணலியில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
  2. இதை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  3. பாத்திரத்தில் புளிக் கரைசல் மஞ்சள்தூள், உப்பு ,பெருங்காயம் சேர்த்துக் கொதிக்கவிடவும்
  4. புளி பச்சை வாசனை போனதும் அரைத்த விழுதை சேர்த்து பொங்க விட்டு இறக்கவும்
  5. நெய்யில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்