வீடு / சமையல் குறிப்பு / "உள்ளித் தீயல் "

Photo of " Ulli Theeyal " by Navas Banu L at BetterButter
330
0
0.0(0)
0

"உள்ளித் தீயல் "

Feb-20-2019
Navas Banu L
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

"உள்ளித் தீயல் " செய்முறை பற்றி

Easy Ulli Theeyal உள்ளி தீயல் (pearl onion gravy ): தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் - 1கப் (20 to 30 shallots ) தேங்காய் -1/2 முடி (துருவியது ) காய்ந்த மிளகாய் - 6 மல்லி விதை - 2 to 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை புளி எண்ணெய் உப்பு தாளிக்க : கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி வெந்தயம் -1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை செய்முறை: ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி ,தேங்காய் ,காய்ந்த மிளகாய் மற்றும் மல்லி விதை சேர்த்து தேங்காய் பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.பின்னர் இந்த மசாலாவை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள் , உப்பு சேர்க்கவும். பின்னர் கரைத்து வைத்த புளித்தண்ணீர் தேவையான அளவு சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் அரைத்து வைத்த மசாலா சேர்த்து கிளறவும். பின்னர் 1/2 கப் தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைக்கவும். இறுதியில் தாளிக்க தேவையான பொருட்கள் சேர்த்து தாளித்து இறக்கவும். குறிப்பு : தேங்காய் எண்ணெய் உபயோகித்தால் நல்ல சுவையாக இருக்கும் .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • இந்திய
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சின்ன வெங்காயம் - 30
  2. தேங்காய் துருவியது - 1/2 மூடி
  3. காய்ந்த மிளகாய் - 6
  4. மல்லி விதை - 4 தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூண்
  6. கறிவேப்பிலை - சிறிதளவு
  7. புளி - ஒரு உருளை
  8. எண்ணை - 4 டேபிள்ஸ்பூண்
  9. உப்பு - தேவைக்கு
  10. தாளிக்க
  11. கடுகு - 1 டீஸ்பூண்
  12. உளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூண்
  13. வெந்தயம் - 1/4 டீஸ்பூண்
  14. கறிவேப்பிலை - சிறிது

வழிமுறைகள்

  1. 1. ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூண் எண்ணை ஊற்றி தேங்காய்,காய்ந்த மிளகு, மல்லி விதை சேர்த்து தேங்காய் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  2. 2.வறுத்த இந்த மஸாலாவை மிக்ஸி ஜாரில் வடிய அரைத்துக் கொள்ளவும்.
  3. 3. ஒரு வாணலி அடுப்பில் வைத்து இரண்டு டேபிள்ஸ்பூண் எண்ணை ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. 4.வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும்.
  5. 5. பின்னர் புளியை தண்ணீரில் கரைத்து தேவையான அளவு புளித்தண்ணீர் சேர்த்து வதக்கவும்.
  6. 6.இதனுடன் அரைத்து வைத்த மஸாலா சேர்த்துக் கிளறவும்.
  7. 7.இதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து எண்ணை பிரியும் வரை கொதிக்க வைக்கவும்.
  8. 8.ஒரு சிறிய வாணலி அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூண் எண்ணை ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து உள்ளி தீயலில் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்