வீடு / சமையல் குறிப்பு / பேலியோ முறை சிக்கன் கறி உடன் ராகி சப்பாத்தி

Photo of Paleo style chicken curry with ragi chappathi by Benazer Abdul Kader at BetterButter
332
0
0.0(0)
0

பேலியோ முறை சிக்கன் கறி உடன் ராகி சப்பாத்தி

Feb-25-2019
Benazer Abdul Kader
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
31 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பேலியோ முறை சிக்கன் கறி உடன் ராகி சப்பாத்தி செய்முறை பற்றி

டயட்டில் இருப்பவர்களுக்கு ஏதுவானது இந்த பேலியோ சிக்கன் கறி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் கறி செய்ய தேவையானவை:
  2. மேரினேட் செய்ய:
  3. சிக்கன் ஒரு கிலோ
  4. இஞ்சி பூண்டு விழுது ஒரு மேசைக்கரண்டி
  5. உப்பு ஒரு தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி
  7. மிளகாய்த்தூள் 3 தேக்கரண்டி
  8. கெட்டித்தயிர் 6 மேசைக்கரண்டி
  9. சமைக்க:
  10. பெரிய வெங்காயம் 4
  11. சீரகம் அரை தேக்கரண்டி
  12. ஏலக்காய் 4
  13. கிராம்பு நான்கு
  14. பட்டை இரண்டு துண்டு
  15. தக்காளி ஒன்று
  16. நெய் 2 தேக்கரண்டி
  17. பச்சை மிளகாய் 3
  18. மஞ்சள் பொடி அரை தேக்கரண்டி
  19. உப்பு தேவையான அளவு
  20. கரம் மசாலா ஒரு தேக்கரண்டி
  21. ராகி சப்பாத்தி செய்ய:
  22. கோதுமை மாவு
  23. ராகி மாவு
  24. உப்பு
  25. தண்ணீர்

வழிமுறைகள்

  1. சிக்கன் கறி செய்ய:
  2. சிக்கனை மேலே செய்யும் பொருட்களுடன் நன்கு கலக்கவும்
  3. பின்னர் அதனை ஃப்ரிட்ஜில் 3 மணி நேரம் ஊறவைக்கவும்
  4. பின்னர் ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றவும்
  5. அதனுடன் சீரகம் ,கிராம்பு, ஏலக்காய் ,பட்டை சேர்க்கவும்
  6. பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  7. பின்னர் தேவைக்கு உப்பு மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்க்கவும்
  8. பின்னர் தக்காளி சேர்த்துக் கொள்ளவும்
  9. தக்காளி வெந்ததும் ஊறவைத்த சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டவும்
  10. இதனை 10 நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும்
  11. பாத்திரம் அடிபிடிக்காமல் அடிக்கடி கிளறி விடவும்
  12. இப்போது அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்
  13. மீண்டும் 10 நிமிடங்கள் வேக விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்
  14. சிக்கன் வெந்ததும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி பின்பு அதனை இறக்கவும்
  15. சப்பாத்தி செய்ய:
  16. கோதுமை மாவில் தண்ணீர் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு விரவும்
  17. சப்பாத்தி மாவினை பத்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும்
  18. பின்னர் சப்பாத்தி உருண்டைகளை ராகி மாவில் பிரட்டி தேய்த்து எடுக்கவும்
  19. சூடான தோசைக் கல்லில் சப்பாத்தியை சுட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்