வீடு / சமையல் குறிப்பு / பாசிப் பயறு புலவ்

Photo of Green gram pulau by Deepa Srivatsan at BetterButter
304
0
0.0(0)
0

பாசிப் பயறு புலவ்

Feb-28-2019
Deepa Srivatsan
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாசிப் பயறு புலவ் செய்முறை பற்றி

பாசிப் பயறு உடலுக்கு மிகவும் நல்லது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசிப்பயறு 100 கிராம்
  2. வெங்காயம் ஒன்று
  3. பூண்டு 4 பல்
  4. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  5. பச்சை மிளகாய் ஒன்று
  6. தக்காளி ஒன்று
  7. உதிரியாக வடித்த சாதம் 2 கப்
  8. பட்டை ஒரு சிறிய துண்டு
  9. எண்ணெய் 2 ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாசிப்பயறை முதல் நாள் இரவே தண்ணீரில் நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும்
  2. ஊறவைத்த பாசிப்பயிறை பத்து நிமிடம் கொதிக்கும் நீரில் போட்டு நன்றாக வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் பட்டை வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்றாக வதக்க வேண்டும்
  4. இஞ்சி பூண்டு பச்சை மிளகாயை நன்றாக அரைத்து வதக்கிய வெங்காயத்துடன் போட்டு நன்றாக வதக்க வேண்டும்
  5. பிறகு வடித்து வைத்துள்ள பாசிப்பயறை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்
  6. அதன்பின் உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்தை அதனுடன் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து இறக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்