வீடு / சமையல் குறிப்பு / மங்குஸ்தான் கீர்

Photo of Mangusthan keer by sudha rani at BetterButter
443
0
0.0(0)
0

மங்குஸ்தான் கீர்

Feb-28-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மங்குஸ்தான் கீர் செய்முறை பற்றி

இது வெயில் காலங்களில் அதிக அளவில் பரவலாக கிடைக்கும் பழம் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது இதை கொண்டு ஒரு ஆரோக்கியமான கீர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மங்குஸ்தான் பழம் 4
  2. பாசுமதி அரிசி 1/2 கப்
  3. பால் 2 லிட்டர்
  4. சர்க்கரை 1 கப்
  5. மில்க்மெயின்ட் 1/2 கப்
  6. ரோஸ் வாட்டர் சிறிது

வழிமுறைகள்

  1. மங்குஸ்தான் பழத்தை தோல் உரித்து உள்ளே இருக்கும் சுளையை தனியாக எடுத்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்
  2. பாஸ்மதி அரிசியை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக உடைத்து ஒரு முறை ஜலித்து எடுக்கவும்
  3. பாலை கொதிக்க விட்டு அதில் அரிசியை சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும்
  4. அரிசி நன்கு வெந்து வந்ததும் சர்க்கரை மற்றும் அரைத்த பழ விழுதை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  5. அதிக நேரம் வரை கொதிக்க விடாமல் சிறிது சர்க்கரை கரைந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
  6. பின் அந்த சூட்டிலே மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  7. சற்று ஆறியதும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து நன்கு குளிரவிட்டு ஜில் என்று பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்