வீடு / சமையல் குறிப்பு / சத்து மாவு கஞ்சி

Photo of Protein drink by sudha rani at BetterButter
686
0
0.0(0)
0

சத்து மாவு கஞ்சி

Feb-28-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சத்து மாவு கஞ்சி செய்முறை பற்றி

சத்துக்கள் அதிகம் உள்ள அனைவருக்கும் ஏற்ற வகையில் ஒரு கஞ்சி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சத்து மாவு தயாரிக்க:
  2. முளைகட்டிய ராகி 100 கிராம்
  3. பச்சை பயறு 100 கிராம்
  4. பொட்டுக்கடலை 100 கிராம்
  5. பார்லி 100 கிராம்
  6. கோதுமை 100 கிராம்
  7. தரமான புலுங்கல் அரிசி 100 கிராம்
  8. கஞ்சி தயாரிக்க:
  9. சத்து மாவு 2_1/2 டேபிள்ஸ்பூன்
  10. வெல்லம் 1 கப்
  11. தேங்காய் பால் 2 கப்
  12. ஏலத்தூள் 1/2 ஸ்பூன்
  13. சுக்கு தூள் 1/2 ஸ்பூன்
  14. ஜாதிக்காய் பொடி 1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ராகியை சுத்தம் செய்து அலசி எட்டு மணி நேரம் வரை ஊறவிட்டு பின் கல் மண் போக அரித்து எடுத்து சுத்தமான மஸ்லின் துணியில் கட்டி வைத்து இரண்டு நாள் வரை முளை கட்டி வைக்கவும்
  2. பின் மற்ற பொருட்களை சுத்தம் செய்து கொள்ளவும்
  3. பின் இதை தனித்தனியாக மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வறுத்து எடுத்து ஆறவிடவும்
  4. பின் மிஷினில் கொடுத்து திரித்து 2 நாள் வரை நிழலில் உலர்த்தி ஜலித்து எடுத்து வைக்கவும்
  5. கஞ்சி:
  6. தேங்காயை துருவி மிகவும் கெட்டியான பால் 1 கப் எடுத்து வைக்கவும்
  7. பின் மீண்டும் அரைத்து இன்னும் 1 கப் பால் எடுத்து தனியாக வைக்கவும்
  8. சத்து மாவை சிறிது இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும்
  9. வாணலியில் வெல்லம் மற்றும் மீதி உள்ள இரண்டாம் தேங்காய் பால் விட்டு நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  10. பின் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
  11. பின் சத்து மாவு கரைசலை ஊற்றி தொடர்ந்து நன்கு கிளறி விடவும்
  12. நன்கு வெந்து மணம் வரும் போது ஏலத்தூள் சுக்கு தூள் ஜாதிக்காய் பொடி சேர்த்து கலந்து இறக்கவும்
  13. பின் முதல் தேங்காய் பால் விட்டு நன்கு கலந்து கொள்ளவும்
  14. குறிப்பு:
  15. (இரும்பு சத்திற்கு முளைகட்டிய ராகி புரோட்டின் சத்திற்கு பச்சை பயறு மற்றும் பொட்டுக்கடலை உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும் வகையில் பார்லி நார்சத்திற்கு கோதுமை இவ்வாறு சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு )

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்