வீடு / சமையல் குறிப்பு / ராகி இட்லி பெப்பர் ஃப்ரை

Photo of Ragi Idli pepper fry by Abinaya bala at BetterButter
493
0
0.0(0)
0

ராகி இட்லி பெப்பர் ஃப்ரை

Feb-28-2019
Abinaya bala
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ராகி இட்லி பெப்பர் ஃப்ரை செய்முறை பற்றி

ராகி வைத்து இட்லி செய்து அதன் மூலம் செய்யப்படும் பெப்பர் ஃப்ரை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ராகி மாவு ஒரு கப்
  2. தயிர் அரை கப்
  3. பெப்பர் பவுடர் 4 டீஸ்பூன்
  4. பொடி வெங்காயம் 20
  5. உப்பு தேவையான அளவு
  6. கருவேப்பிலை கொத்தமல்லி தேவையான அளவு
  7. கடலை எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் ராகியை தயிர் மற்றும் உப்பு கலந்து நன்கு அடித்து இட்லிகளாக ஊற்றி வேக வைத்து பின் சிறு சிறு துண்டுகளாக வெட்டி விடவும்
  2. பின் வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. பின் வேகவைத்து வெட்டிவைத்த ராகி இட்லி துண்டுகளை அதில் போட்டு நன்கு வதக்கவும்
  4. பின்னர் தேவையான உப்பு மற்றும் பெப்பர் பவுடர் சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்கவும்
  5. சுவையான ராகி இட்லி பெப்பர் ஃப்ரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்