Photo of Bhel puri by Deepa Srivatsan at BetterButter
400
1
0.0(0)
0

பேல் பூரி

Mar-03-2019
Deepa Srivatsan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பேல் பூரி செய்முறை பற்றி

தெரு ஓரங்களில் விற்கப்படும் பிரபலமான சாட் இது அனைவருக்கும் விருப்பமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பொரி பாக்கெட் பெரியது ஒன்று
  2. வெங்காயம் 2 பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்
  3. தக்காளி 2 பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்
  4. வெள்ளரிக்காய் 1 பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்
  5. கேரட்-1 துருவிக் கொள்ள வேண்டும்
  6. உருளைக்கிழங்கு பெரியதாக ஒன்று வேகவைத்து மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்
  7. புதினா ஒரு கட்டு
  8. பச்சை மிளகாய் 3
  9. உப்பு தேவையான அளவு
  10. பேரீச்சம் பழம் கொட்டை நீக்கியது அரை கப்
  11. கொத்தமல்லி சிறிதளவு
  12. மிக்ஸர் 50 கிராம்
  13. ஓமப்படி அம்பது கிராம்

வழிமுறைகள்

  1. காரச் சட்னி செய்யும் முறை: முதலில் புதினா பச்சை மிளகாய் 2 உப்பு ஆகியவற்றை சிறிது நீர் விட்டு நைஸாக தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்
  2. இனிப்பு சட்னி செய்ய: பேரிச்சம்பழம் ஒரு பச்சை மிளகாய் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
  3. பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், மசித்த உருளைக்கிழங்கு தக்காளி,கேரட், வெள்ளரிக்காய் ஆகியவற்றை போட்டு தேவையான அளவு கார சட்னி மற்றும் இனிப்பு சட்னி போட்டு பொரியை போட்டு நன்றாக கலக்க வேண்டும்
  4. அதன் பிறகு மிக்ஸரை போட்டு நன்றாக கலக்கவேண்டும் கடைசியில் ஓமப்பொடியை பொடியை மேலே தூவி கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்