வீடு / சமையல் குறிப்பு / கடற்கரையில் விற்கப்படும் இன்ஸ்டன்ட் ஜிலேபி

Photo of Beach side instant jilebi by Rabia Hamnah at BetterButter
231
0
0.0(0)
0

கடற்கரையில் விற்கப்படும் இன்ஸ்டன்ட் ஜிலேபி

Mar-12-2019
Rabia Hamnah
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கடற்கரையில் விற்கப்படும் இன்ஸ்டன்ட் ஜிலேபி செய்முறை பற்றி

மாலை நேரங்களில் கடற்கரையில் விற்கப்படும் இன்ஸ்டன்ட் ஜிலேபி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தோசை மாவு ஒரு கப்
  2. கோதுமை மாவு ஒரு கப்
  3. ஆப்ப சோடா 2 சிட்டிகை
  4. ஃபுட் கலர் கால் ஸ்பூன்
  5. சீனி ஒரு கப்
  6. தண்ணீர் ஒரு கப்
  7. ஏலக்காய்-2
  8. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. தோசை மாவு கோதுமை மாவு ஃபுட் கலர் ஆப்ப சோடா இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து வைக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் சீனி தண்ணீர் இரண்டு ஏலக்காய் தட்டி சேர்த்து கொதிக்க வைக்கவும்
  3. சீனி நன்கு கரைந்து 5லிருந்து 8 நிமிடம் நன்றாகக் கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும்
  4. மாவை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி மூடி யில் சிறு துளை இட்டு கொள்ளவும்
  5. எண்ணெயை நன்றாக காய வைத்து மிதமான சூட்டில் மாவை சுற்றி சுற்றி பாட்டிலால் ஊற்றி பொரித்து எடுக்கவும்
  6. நன்கு பொரிந்து வந்ததும் வெதுவெதுப்பான சீனிப்பாகில் போட்டு ஐந்து நிமிடம் ஊற வைத்து பின்பு தனியே எடுத்து பரிமாறவும்
  7. சுவையான மொறுமொறுப்பான கடற்கரையில் விற்கப்படும் இன்ஸ்டன்ட் ஜிலேபி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்