வீடு / சமையல் குறிப்பு / காயல்பட்டினம் வாடா

Photo of Kayalpattinam vaada by Rabia Hamnah at BetterButter
14
1
0.0(0)
0

காயல்பட்டினம் வாடா

Mar-15-2019
Rabia Hamnah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காயல்பட்டினம் வாடா செய்முறை பற்றி

காயல்பட்டினத்தில் தெரு கடை மற்றும் அல்லாமல் கடற்கரையில் விற்கப்படும் ஒரு முக்கியமான உணவு பண்டம். கடற்கரைக்கு வருபவர்கள் இந்த வாடாவை ருசி பார்க்காமல் போக மாட்டார்கள். வாடா என்றாலே காயல்பட்டினம் தான்

செய்முறை டாக்ஸ்

 • நான் வெஜ்
 • மீடியம்
 • பண்டிகை காலம்
 • தமிழ்நாடு
 • ஃபிரையிங்
 • அப்பிடைசர்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. அரிசி மாவு(பரு மாவு)- ஒரு கப் வறுத்தது
 2. வேகவைத்த சாதம் -அரை கப்
 3. மஞ்சள் தூள் 3 ஸ்பூன்
 4. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
 5. தேங்காய் துருவல் 3 மேஜைக்கரண்டி
 6. உப்பு தேவைக்கு
 7. வெந்நீர் சிறிது
 8. அடக்கம் செய்ய தேவையானவை
 9. பெரிய வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது
 10. பச்சை மிளகாய் 1 நறுக்கியது
 11. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
 12. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
 13. உப்பு தேவைக்கு
 14. தேங்காய் துருவல் அரை மூடி
 15. மாசி பொடி- 4-5ஸ்பூன்
 16. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

 1. சாதத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்
 2. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு அரைத்த சாதம் மஞ்சள்தூள் அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் உப்பு 3-4டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து வெதுவெதுப்பான வெந்நீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
 3. ரொட்டிக்கு பிசைவது போல் பிசைந்து 30 நிமிடம் வைக்கவும்
 4. ஒரு பாத்திரத்தை வைத்து மூன்று ஸ்பூன் எண்ணை விடவும் எண்ணை காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
 5. பின்பு நறுக்கிய பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
 6. உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
 7. வெங்காயம் அரை பதம் வெந்ததும் தேங்காய் துருவலை சேர்க்கவும்
 8. தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின் மாசி தூளை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கி ஆற விடவும்
 9. ஒரு துணியை தண்ணீரில் நனைத்து நன்கு பிழிந்து பலகையின் மீது விரித்து வைக்கவும்
 10. ஒரு சிறிய உருண்டை மாவை எடுத்து துணியின் மீது வைத்து வட்ட வடிவத்தில் தட்டி வைக்கவும்
 11. இப்படி எல்லா மாவையும் வட்ட வடிவத்தில் தட்டி வைக்கவும்
 12. தட்டிய மாவின் மேலே மாசி கலவையை வைத்து இன்னொரு வட்டவடிவ மாவை வைத்து மூடவும்
 13. ஓரங்களை நன்கு விரலை வைத்து ஒட்டிக் கொள்ளவும்
 14. பாத்திரத்தில் எண்ணெயைக் காய வைக்கவும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் தட்டிய வாடாவை சேர்த்து பொரித்து எடுக்கவும்
 15. ஒருபுறம் பொரிந்ததும் திருப்பிவிட்டு மறுபுறமும் பொரியவிடவும்
 16. இப்படி மூன்றிலிருந்து நான்கு முறை பிரட்டி விட்டு நன்கு முறுவலாக வந்ததும் எண்ணெயை வடித்து எடுத்து விடவும்
 17. சூடான டீயுடன் அல்லது கறி கஞ்சியுடன் பரிமாற சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்