வீடு / சமையல் குறிப்பு / இட்லி மூன்று வகையான சட்னி

Photo of Idli with three varieties of chutney by jassi aarif at BetterButter
276
0
0.0(0)
0

இட்லி மூன்று வகையான சட்னி

Mar-19-2019
jassi aarif
495 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இட்லி மூன்று வகையான சட்னி செய்முறை பற்றி

இட்லி மூன்று வகையான சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய்
  2. பொட்டுக்கடலை பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது கறிவேப்பிலை மல்லித்தழை
  3. மல்லி புதினா தேங்காய் வரமிளகாய் சீரகம் புளி
  4. தக்காளி பூண்டு மஞ்சள் தூள் தனி மிளகாய் பொடி
  5. இட்லிக்கு 4 கப் இட்லி அரிசி ஒரு கப் உளுந்து ஒரு ஸ்பூன் வெந்தயம்

வழிமுறைகள்

  1. தேங்காய் ஒரு கப் பொட்டுகடலை சிறிதளவு இஞ்சி பூண்டு கால் டீஸ்பூன் கறிவேப்பிலை சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும் தேங்காய் சட்னி ரெடி
  2. மல்லித்தழை ஒரு கப் புதினா ஒரு கப் வர மிளகாய் ஒன்று பூண்டு 2 பல் இஞ்சி சிறு துண்டு தேங்காய் சிறிதளவு உப்பு சீரகம் அரை டீஸ்பூன் புளி சின்ன நெல்லிக்காய் அளவு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும் புதினா கொத்தமல்லி சட்னி ரெடி
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை பெருங்காயம் தாளிக்கவும் நான்கு தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும் 5 to 6 பூண்டுபல் சேர்க்கவும் தனி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் சேர்க்கவும் நன்கு வதக்கி எண்ணெய் பிரியும் போது சிறிது மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள சுவையான காரமான தக்காளி சட்னி ரெடி
  4. நான்கு மணி நேரத்திற்கு முன்பே 4 கப் இட்லி அரிசிக்கு ஒரு கப் உளுந்து ஒரு ஸ்பூன் வெந்தயம் ஊற வைக்கவும்
  5. முதலில் உளுந்தை அரைக்கவும் பின்னர் அரிசி வெந்தயததை கிரைண்டரில் அரைக்கவும் கடைசியில் உளுந்தையும் சேர்த்து எல்லாத்தையும் ஒன்றாக அரைக்கவும்
  6. தேவையான அளவு மாவை உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்
  7. 3 to 4 மணி நேரம் கழித்து மாவு புளித்ததும் இட்லி தட்டில் இட்லியாக வேகவைத்து எடுக்கவும்
  8. வெந்தயம் சேர்ப்பதால் தோசையாகவும் வார்த்துக் கொள்ளலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்