வீடு / சமையல் குறிப்பு / மும்பை ஜினி தோசை

Photo of Mumbai jini dosa by Ashwini Lakshmanakumar at BetterButter
598
1
0.0(0)
0

மும்பை ஜினி தோசை

Mar-19-2019
Ashwini Lakshmanakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மும்பை ஜினி தோசை செய்முறை பற்றி

மும்பை வீதிகளில் பிரபலமான,காரமும் புளிப்பும் இனிப்பும் மிகுந்த ஜினி தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • நார்த் இந்தியன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தோசை மாவு 1 பெரிய கரண்டி
  2. வெண்ணை 1 பெரிய துண்டு
  3. வெங்காயம் பொடியாக நறுக்கியது 1 மேஜை கரண்டி
  4. முட்டை கோஸ் பொடியாக நறுக்கியது 1 மேஜை கரண்டி
  5. குடை மிளகாய் பொடியாக நறுக்கியது 1மேஜை கரண்டி
  6. ஸ்செஸ்வான் சட்னி 1 மேஜை கரண்டி
  7. சில்லி சாஸ் 2 மேஜை கரண்டி
  8. டொமட்டோ கெட்சுப் 1 மேஜை கரண்டி
  9. பாவ் பாஜி மசாலா 1 மேஜை கரண்டி
  10. சீஸ் 1 சிறிய துண்டு

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு கரண்டி மாவை மெலிதான தோசையாக வார்க்கவும்.
  2. மேல் பகுதி லேசாக வெந்தவுடன் வெண்ணை துண்டை தோசையின் மேல் தேய்த்து உருக்கவும்.
  3. ,பின் வெங்காயம், குடை மிளகாய், முட்டை கோஸ் சேர்க்கவும்.
  4. ஸ்செஸ்வான் சட்னி, டொமட்டோ கெட்சுப் மற்றும் சில்லி சாஸ் சேர்க்கவும்.
  5. பாவ் பாஜி மசாலா சேர்க்கவும்.
  6. அனைத்தையும் நன்கு மசித்து விடவும்.
  7. தோசை முழுவதும் இந்த கலவையை பரப்பி விட்டு, சீஸ் தூவவும்.
  8. தோசையை சீஸ் உருகும் வரை மூடி வைக்கவும்.
  9. சீஸ் உருகியதை காண்க.
  10. தோசையை மூன்றாக ரோல் செய்து இரக்கவும்.
  11. இப்பொழுது இதை மூன்றாக கட் செய்து அதை ரோல் செய்து மீண்டும் மேலே சீஸ் தூவி பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்