வீடு / சமையல் குறிப்பு / பிஷ் மற்றும் சிப்ஸ் டார்டர் சாஸுடன்

Photo of Fish and chips with tarter sauce(British street food) by Sumaiya Arafath at BetterButter
417
2
0.0(0)
0

பிஷ் மற்றும் சிப்ஸ் டார்டர் சாஸுடன்

Mar-23-2019
Sumaiya Arafath
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிஷ் மற்றும் சிப்ஸ் டார்டர் சாஸுடன் செய்முறை பற்றி

பிரிட்டன் நாட்டின் பிரபலமான தெருக்கடை உணவு மீன் மற்றும் சிப்ஸ்.மீனை பேட்டரில் முக்கி பொரித்து அதனுடன் மொறு மொறு சிப்ஸும் டார்டர் சாஸும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • பிரிட்டிஷ்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மீனை மேரினேட் செய்ய:
  2. துண்டு மீன் 125 கிராம்
  3. உப்பு தேவைக்கு
  4. ந.மிளகு தூள்,மிளகாய் தூள் 1/4 தே.க விதம்
  5. எலுமிச்சை சாறு 1 தே.க
  6. பேட்டர் செய்ய:
  7. மைதா 12 மே.க
  8. பேக்கிங் தூள் 1/8 தே.க
  9. உப்பு தேவைக்கு
  10. நல்லமிளகு தூள் 1/2 தே.க
  11. மிளகாய் தூள் 1/2 தே.க
  12. முட்டை மஞ்சள் தனி,வெள்ளை தனி பிரித்தது 1
  13. பூண்டு பேஸ்ட் 1/4 தே.க
  14. தண்ணீர் தேவைக்கு
  15. எண்ணை 1 தே.க
  16. சோள மாவு மற்றும் மைதா கலவை 1/4 கப்
  17. டார்டார் சாஸ்:
  18. வெள்ளரிக்காய் 1/2
  19. மயோனைஸ் 1/4 கப்
  20. துருவிய் வெங்காயம் 1 மே.க
  21. எலுமிச்சை சாறு 1 மே.க
  22. உப்பு ந.மிளகாய் தேவைக்கு
  23. பார்ஸ்லி (அ) மல்லி இலை -சிறிது
  24. சிப்ஸ் செய்ய:
  25. உருளைக்கிழங்கு 2
  26. உப்பு ,ந.மிளகு தேவைக்கு
  27. எண்ணை பொரிக்க
  28. சிறிது வினிகர்

வழிமுறைகள்

  1. முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து ந.மிளகு,உப்பு,எலுமிச்சை சாறு, மிளகாய் தூள் சேர்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்
  2. பேட்டர் செய்ய மைதா மாவு, உப்பு,பேக்கிங் தூள், நல்லமிளகு, முட்டையின் மஞ்சள் கரு ,எண்ணெய்,பூண்டு சேர்க்கவும்
  3. தண்ணீர் ஊற்றி பேட்டர் ஆக்கி அதனுடன் அடித்த வெள்ளை கரு சேர்க்கவும்
  4. 1/2 மணிநேரம் வைக்கவும்
  5. பிறகு மீனை முதலில் மைதா-சோள கலவையில் பிரட்டவும்
  6. பிறகு பேட்டரில் முக்கி சூடான எண்ணையில் பொரிக்கவும்
  7. பொரிந்ததும் கோரி வைக்கவும்
  8. டார்டர் சாஸ் செய்ய:
  9. வெள்ளரிக்காயை துருவி அதன் சாறை பிழிந்து எடுக்கவும்
  10. அதனுடன் மயோனைஸ், வெங்காயம், நல்ல மிளகு தூள், உப்பு மல்லி இலை,எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸ் செய்து பிரிட்ஜில் வைக்கவும்
  11. சிப்ஸ் செய்ய;
  12. உருளைக்கிழங்கை சிப்ஸ் வடிவில் வெட்டி அதனை நன்கு கழுவி வைக்கவும்
  13. பிறகு அதை தண்ணீரில் 2 நிமிடம் கொதிக்க வைக்கவும்
  14. இதை வடிகட்டி டவலில் உலர்த்தி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  15. அதன் மேலே நல்ல மிளகு,உப்பு மற்றும் வினிகர் தூவவும்
  16. சுவையான மீன் மற்றும் சிப்ஸ் டார்டர் சாஸுடன் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்