வீடு / சமையல் குறிப்பு / லாங்கோஸ் (ஹங்கேரியன் வருத்த ரொட்டி)

Photo of Langos ( Hungarian Fried Bread) by Jayanthy Asokan at BetterButter
43
0
0.0(0)
0

லாங்கோஸ் (ஹங்கேரியன் வருத்த ரொட்டி)

Mar-31-2019
Jayanthy Asokan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

லாங்கோஸ் (ஹங்கேரியன் வருத்த ரொட்டி) செய்முறை பற்றி

லாங்கோஸ் ஹங்கேரியின் வறுத்த ரொட்டி ,தெரு கடையின் பீட்சா என்பார்கள். இது மசித்த உருளைக்கிழங்கு மற்றும் மைதா ஈஸ்ட் கொண்டு செய்யப்பட்ட உணவாகும்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • ஐரோப்பிய
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு 13\4 கப்
  2. வேக வைத்த மசித்த உருளைக்கிழங்கு 2
  3. ஈஸ்ட் 2 1/2 தேக்கரண்டி
  4. சர்க்கரை 1 மேஜைக்கரண்டி
  5. உப்பு 3/4 மேஜைகரண்டி
  6. நறுக்கிய பூண்டு 2
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. தயிர் 1 கப்
  9. மிளகுத்தூள் தேவைக்கேற்ப
  10. துருவிய சீஸ் 1/2 கப்
  11. கொத்து மல்லி தழை சிறிதளவு
  12. இனிப்பு வகைக்கு தேவையான பொருட்கள்
  13. பட்டை பொடி 1 மேஜைக்கரண்டி
  14. சர்க்கரை 1/4 கப்
  15. மேப்பிள் சிரப் 1/2 கப்
  16. வால்நெட் 6
  17. சுல்தானாஸ் 10

வழிமுறைகள்

  1. ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதா மற்றும் ஈஸ்டை கலக்க வேண்டும்.
  2. அதில் சர்க்கரை உப்பு மசித்த வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் பால் சேர்த்து நன்கு பிசைய வேண்டும்
  3. கிச்சன் கவுண்டரில் சிறிதளவு மைதா மாவைத் தூவி பிசைந்த மாவை நன்கு பிசைய வேண்டும் ஒரு 5 முதல் 7 நிமிடம் வரை பிசைய வேண்டும்
  4. பிசைந்த மாவை ஒரு பாத்திரத்தில் வைத்து அது இரண்டு மடங்காக வரும் வரை வைக்க வேண்டும்.
  5. இரண்டு மடங்காக ஆன பின் சிறிது மைதா மாவை கிச்சன் கவுண்டர் மேல் தூவி, மாவை நன்கு பிசைந்து உருண்டைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும்
  6. நான்கு உருண்டைகளாக சமமாக பிரித்து பின் அதை 20 நிமிடம் வைக்க வேண்டும் .
  7. 20 நிமிடம் கழித்து பின் ஒரு உருண்டை எடுத்து அதை சமமாக உருட்டி சப்பாத்தி போல் இட வேண்டும்
  8. வட்டமாக சப்பாத்தி போல் இட்டபின் ஒரு கத்தியை கொண்டு நடுவில் நான்கு கீரல் இட வேண்டும்
  9. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் ஒவ்வொன்றாக லங்கோசை வறுத்து எடுக்க வேண்டும்
  10. நன்கு பொன்னிறமாக இருக்க வேண்டும் .
  11. கார வகை லங்கோஸ் செய்வதற்கு நறுக்கிய பூண்டை அதன் மேல் தேய்த்து தயிர் மற்றும் உப்பை தூவ வேண்டும் .
  12. பின் துருவிய சீஸ் மற்றும் மிளகுத்தூள் கொத்தமல்லி தழையை தூவி அலங்கரிக்க வேண்டும்
  13. இனிப்பு வகை செய்வதற்கு பட்டை பொடியை சர்க்கரையில் கலக்கவேண்டும் கலந்த சர்க்கரையை மேல் தூவி அதன் மேல் மேப்பில் சிறப்பை ஊற்ற வேண்டும்
  14. பின் அதன் மேல் வால்நட் மற்றும் சுல்தானாஸ் அரசை தூவ வேண்டும்.
  15. இதுவே இனிப்புவகை லங்கோஸ் ஆகும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்