வீடு / சமையல் குறிப்பு / பாதாம் குல்பி

Photo of Batham kulfi by Balajayasri Dhamu at BetterButter
344
0
0.0(0)
0

பாதாம் குல்பி

Apr-16-2019
Balajayasri Dhamu
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாதாம் குல்பி செய்முறை பற்றி

பாதாம் பருப்பு, பால் பயன்படுத்தி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாதாம் பருப்பு5
  2. பால்1/2லிட்டர்
  3. மில்க் மெய்ட்2ஸ்பூன் (option)
  4. டைமண்ட் கற்கண்டு4ஸ்பூன்
  5. அல்லது சர்க்கரை4ஸ்பூன்
  6. ஏலக்காய் பொடி1/4ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் பாலை காய்ச்ச வேண்டும்
  2. 1/2லி பால் பாதியாக ஆகும் வரை மிதமான தீயில் வைத்து காய்ச்சவும்
  3. பின்னர் மேலே வரும் ஆடையை ஒரு ஸ்பூன் வைத்து எடுத்து வைக்கலாம் அல்லது அந்த பாலில் போடலாம்
  4. மில்க் மெய்ட் சேர்க்க
  5. கற்கண்டு அல்லது சர்க்கரை பாலில் சேர்க்க நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  6. இப்போது ஏலக்காய் பொடி, பாதாம் பருப்பு துருவல் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அனைத்து விடவேண்டும்
  7. ஆடை தனியாக எடுத்து வைத்து இருந்தால் அதில் சற்று பாத்திரத்தில் உள்ள கலவையை சேர்த்து நன்றாக பீட் செய்ய வேண்டும் அல்லது மிக்ஸியில் அடித்து கொள்ள வேண்டும்
  8. இப்போது இதை பாத்திரத்தில் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  9. சூடு ஆறியதும் குல்பி மோல்டில் ஊற்றி கொள்ள வேண்டும்
  10. குல்பி மோல்டு இல்லை என்றால் டம்ளாரில் ஊற்றி மேலே பாலிதீன் கவர் வைத்து ரப்பர் பேண்ட் போடுங்கள். நடுவில் ஒரு ஓட்டை போட்டு குச்சியை சொருகி கொள்ள வேண்டும்
  11. இப்போது4முதல்5 மணிநேரம் பிரிசரில் செட் செய்து வைக்க வேண்டும்
  12. இப்போது டம்ளாரை தண்ணீரில் வைத்து எடுத்து குச்சியை வெளியே எடுக்க வேண்டும்
  13. இப்போது சுவையான குல்பி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்