காரமான மீன் குழம்பு | Spicy Fish Curry in Tamil

எழுதியவர் BetterButter Editorial  |  4th Sep 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Spicy Fish Curry by BetterButter Editorial at BetterButter
காரமான மீன் குழம்புBetterButter Editorial
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    45

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

1247

0

காரமான மீன் குழம்பு recipe

காரமான மீன் குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Spicy Fish Curry in Tamil )

  • மீன் துண்டுகள் - 1/2 கிலோ
  • தண்ணீர் - 1 & 1/2 கப்
  • தக்காளி - 4 (நறுக்கியது)
  • பச்சை மிளகாய் - 2 ( நறுக்கியது )
  • வெங்காயம் - 1 ( நறுக்கியது )
  • புளிக்கரைசல் - 1 தேக்கரண்டி
  • சீரகத் தூள் - 1 டீக்கரண்டி ( வறுத்து மற்றும் அரைத்தது )
  • காஷ்மீர் சிகப்பு மிளகாய் தூள் - 1 டீக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீக்கரண்டி
  • மஞ்சள்தூள் - 1/2 டீக்கரண்டி
  • உப்பு சுவைக்காக

காரமான மீன் குழம்பு செய்வது எப்படி | How to make Spicy Fish Curry in Tamil

  1. வெங்காயத்தை எண்ணையில் லேசான பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். 2 நிமிடம் வேகவைக்கவும்.
  2. மஞ்சள்தூள், சீரகத் தூள், சிகப்பு மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்துக்கொள்ளவும். கிளறி விட்டு 2 நிமிடம் வறுக்கவும். நறுக்கிய தக்காளியை சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வேகவைக்கவும்.
  3. அடுப்பில் தீயை குறைத்து விடவும், 1 கப் தண்ணீர் மற்றும் புளிக்கரைசலை சேர்க்கவும், தொடர்ந்த கிளறி விடவும்.
  4. மீன் துண்டுகள் மற்றும் சிகப்பு மிளகாய் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
  5. மூடியை கொண்டு மூடிவிட்டு 10 நிமிடம் வேகவிடவும். மீன் நன்கு வெந்து இருப்பதை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

Reviews for Spicy Fish Curry in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.