சேவை (சேமியா) உப்புமா | Sevai Upma in Tamil

எழுதியவர் Anjana Chaturvedi  |  28th Sep 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Sevai Upma recipe in Tamil,சேவை (சேமியா) உப்புமா, Anjana Chaturvedi
சேவை (சேமியா) உப்புமாAnjana Chaturvedi
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

4088

0

சேவை (சேமியா) உப்புமா recipe

சேவை (சேமியா) உப்புமா தேவையான பொருட்கள் ( Ingredients to make Sevai Upma in Tamil )

  • சேமியா - 1 கப்
  • தண்ணீர் - 1 கப்
  • பச்சைப் பட்டாணி வேகவைத்தது - 3 தேக்கரண்டி
  • தக்காளி நறுக்கியது - 1
  • இஞ்சி நறுக்கியது - 3/4 தேக்கரண்டி
  • உப்பு - 1 தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு - 1.5 தேக்கரண்டி
  • மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 3/4 தேக்கரண்டி
  • தாளிப்புக்கு:
  • ரீபைண்டு எண்ணெய் - 1.5 தேக்கரண்டி
  • கடுகு - 1 தேக்கரண்டி
  • உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  • முந்திரி பருப்பு உடைத்தது - 1 தேக்கரண்டி (விருப்பம் சார்ந்தது)
  • கறிவேப்பிலை - 6
  • நறுக்கிய பச்சை மிளகாய் - 2

சேவை (சேமியா) உப்புமா செய்வது எப்படி | How to make Sevai Upma in Tamil

  1. ஒரு கடாயைச் சூடுபடுத்தி கடுகு, உளுத்தம்பருப்பு, முந்திரி பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து மிதமானச் சூட்டில் வதக்கவும்.
  2. கடுகு பொரிய ஆரம்பித்ததுமே, நறுக்கிய பச்சை மிளகாய், சேமியாவை உடனே போட்டு சிறு தீயில் வதக்கவும்.
  3. கறிவேப்பிலை, வேகவைத்த பட்டாணி சேர்த்து சில நொடிகள் வறுக்கவும். உப்பு, மஞ்சள், மிளகாய்த் தூள், நறுக்கிய தக்காளி, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.
  4. ஒரு கப் தண்ணீர் ஊற்றி, ஒரு மூடியால் மூடி சிம்மில் 5-7 நிமிடங்கள் வைக்கவும். எலுமிச்சை சாறு, புதிய கொத்துமல்லி சேர்த்து மெதுவாகக் கிளறவும்.
  5. அடுப்பை நிறுத்திவிட்டு கடாயை மூடி சில நிமிடங்கள் விட்டுவைக்கவும். அப்படிச் செய்வதால் நறுமணத்தையும் கூடுதல் தண்ணீரையும் அது உறிஞ்சிவிடும். ( இருந்தால்)
  6. மூடியைத் திறந்து முள்கரண்டியால் மெதுவாகக் கிளறவும். சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

இந்த உப்புமாவைத் தயாரிக்க நான் மூங்கில் ரவையைப் பயன்படுத்த விரும்புகிறேன். இதைத் தயாரிக்க காய்கறிகளின் எந்தக் கலவைச் சேர்மத்தையும் நீங்கள் பயன்படுத்தலாம் அதாவது உருளைக்கிழங்கு, பட்டாணி, காலிபிளவர், கேரட் போன்றவை. மேலும் சேமியாவைச் சேர்ப்பதற்கு முன் வழிமுறை 2ன் போது அவற்றைச் சேர்த்துக்கொள்ளவும். சேமியா தண்ணீர் விகிதம் 1:1, ஆனால் அது நீங்கள் பயன்படுத்தும் சேமியாவின் தரம் மற்றும் வகையைப் பொறுத்தது.

Reviews for Sevai Upma in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.