வெந்தயம் கம்பு பூரி | Methi Bajra Poori in Tamil

எழுதியவர் Anjana Chaturvedi  |  29th Sep 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Methi Bajra Poori recipe in Tamil,வெந்தயம் கம்பு பூரி, Anjana Chaturvedi
வெந்தயம் கம்பு பூரிAnjana Chaturvedi
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

5795

0

வெந்தயம் கம்பு பூரி recipe

வெந்தயம் கம்பு பூரி தேவையான பொருட்கள் ( Ingredients to make Methi Bajra Poori in Tamil )

  • கம்பு மாவு - 1.5 கப்
  • கோதுமை மாவு - 4 தேக்கரண்டி
  • புதிய வெந்தயம் - 1 கப்
  • வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 3/4 கப்
  • தயிர் - 3 தேக்கரண்டி
  • பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
  • மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
  • சீரகம் - 1/2 தேக்கரண்டி
  • உப்பு - 1 தேக்கரண்டி
  • சோடா பை கார்பனேட் - ஒரு சிட்டிகை
  • ரீபைண்டு ஆயில் - பொரிப்பதற்கு

வெந்தயம் கம்பு பூரி செய்வது எப்படி | How to make Methi Bajra Poori in Tamil

  1. வெந்தயக் கீரையைக் கழுவி நறுக்கி, வேகவைத்த உருளைக்கிழங்குகளை மசித்துக்கொள்ளவும்.
  2. ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து கம்பு மாவு மற்றும் எண்ணெயைத் தவிர்த்து மற்ற பொருள்கள் அனைத்தையும் சேர்த்துக்கொள்ளவும்.
  3. கலந்து நன்றாக மசித்து, சூடானத் தண்ணீர் கொஞ்சம் சேர்த்து (சிறிது சிறிதாக), நடுத்தர அளவில் மிருதுவான மாவைத் தயாரித்துக்கொள்ளவும். 4-5 நிமிடங்கள் நன்றாகப் பிசைந்துகொள்க. (அவற்றை வறுக்கத் தயாராக இருக்கும்போதும் மட்டும் இந்த மாவைத் தயாரிக்கவும்).
  4. சிறிய மாவு உருண்டைகளைத் தயாரித்து கோதுமை மாவு தூவி நடுத்தர அளவில் மொத்தமாக பூரிகளைத் தயாரித்துக்கொள்ளவும்.
  5. எண்ணெயைச் சூடுபடுத்தி இந்த பூரிகளை மிதமானச் சூட்டில் பொன்னிறமாக மாறும்வரை பொரிக்கவும்.
  6. ஒரு பேப்பர் தாளில் வடிக்கட்டி சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

1- வறுத்த உணவுகளைத் தவிர்க்கவேண்டும் என்றால் இந்த மாவைக் கொண்டு ரொட்டி அல்லது பரோட்டோ செய்துகொள்ளலாம். 2- உருளைக்கிழங்குக் குழம்பு, மோர், ஊறுகாயோடு சிறப்பாகப் பரிமாறப்படுகிறது.

Reviews for Methi Bajra Poori in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.