ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (ஒரு பிரஷர் குக்கரில்) | Hyderabadi Chicken Dum Biryani ( In a Pressure Cooker ) in Tamil

எழுதியவர் sweta biswal  |  1st Oct 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Hyderabadi Chicken Dum Biryani ( In a Pressure Cooker ) recipe in Tamil,ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (ஒரு பிரஷர் குக்கரில்), sweta biswal
ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (ஒரு பிரஷர் குக்கரில்)sweta biswal
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    45

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

2460

0

About Hyderabadi Chicken Dum Biryani ( In a Pressure Cooker ) Recipe in Tamil

ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (ஒரு பிரஷர் குக்கரில்) recipe

ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (ஒரு பிரஷர் குக்கரில்) தேவையான பொருட்கள் ( Ingredients to make Hyderabadi Chicken Dum Biryani ( In a Pressure Cooker ) in Tamil )

  • 2 கப் பாஸ்மதி அரிசி
  • 600 கிராம் சிக்கன் மார்பு (அல்லது உங்களுக்கு விருப்பம் இருந்தால் கால் பகுதி)
  • 1 கப் தயிர்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 2 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
  • 1 தேக்கரண்டி மல்லி
  • 4 தேக்கரண்டி புதிய தக்காளி சாந்து
  • 1 1/2 இன்ச் இலவங்கப்பட்டை
  • 4 கிராம்பு
  • 2 நட்சத்திர சோம்பு
  • ஜாதிக்காயின் 1 சிறிய இதழ்
  • 2 பச்சை ஏலக்காய்
  • 2 சிட்டிகை ஜாதிக்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 4 தேக்கரண்டி எண்ணெய்
  • 1/2 கப் பால்
  • சிட்டிகை குங்குமப்பூ
  • 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • சுவைக்கேற்ற உப்பு
  • கையளவு புதினா இலை
  • கையளவு கொத்துமல்லி

ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (ஒரு பிரஷர் குக்கரில்) செய்வது எப்படி | How to make Hyderabadi Chicken Dum Biryani ( In a Pressure Cooker ) in Tamil

  1. ஒரு கடாயைச் சூடுபடுத்துக. மல்லி, சீரகம் ஆகியவற்றை வேறு எதுவும் சேர்க்காமல் வறுத்து மென்மையான பவுடராக அரைத்துக்கொள்ளவும்.
  2. தயிரை அடித்து, சீரகம் - மல்லித் தூள், இஞ்சிப் பூண்டு விழுதி, மிளகாய்த் தூள், மஞ்சள், தக்காளி சாந்து, உப்பு, பொடி செய்யப்பட்ட இலவங்கப்பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, ஜாதிக்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும். அவற்றோடு சிக்கன் துண்டுகளைச் சேர்த்து 2 மணி நேரத்திற்கு மேரினேட் செய்யவும்.
  3. வெங்காயத்தை வளையங்களாக வெட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். குங்குமப்பூவை பாலில் ஊறவைக்கவும்.
  4. கடாயினைச் சூடுபடுத்துக. எண்ணெயைச் சேர்க்கவும். சூடானதும், புதினா இலைகள், கொத்துமல்லி, வெங்காய வளையங்கள் சேர்த்து கலந்து பளபளப்பாகும்வரை வறுக்கவும். மேரினேட் செய்த சிக்கன் துண்டுகளைச் சேர்தது 15-20 நிமிடங்கள் அல்லது சிக்கன் 80% வேகும்வரை வேகவைக்கவும்.
  5. அரிசியைக் கழுவி பிரஷர் குக்கரில் சேர்க்கவும். 2 கப் தண்ணீர், நசுக்கிய ஏலக்காய், ஜாதிக்காய், குங்குமப்பூ-பால் சிக்கன் துண்டுகளோடு சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். 1 தேக்கரண்டி நெய்யை இந்த நிலையில் சேர்க்கவும் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருப்பதற்கு.
  6. மூடியிட்டு மூடி 10 நிமிடங்கள் வேகவைக்கவும். அடுப்பிலிருந்து எடுத்து ஆவியை வெளியேறவிடவும். ரைத்தாவுடன் பரிமாறவும்.
  7. கொஞ்சம் வறுத்த/பொன்னிறமான வெங்காய வளையங்களோடு மேலே வைக்கவும், சிறப்பான ஒரு ருசிக்கா!

எனது டிப்:

பிரியாணியைச் சமைப்பதில் மிக முக்கியமானப் பகுதியானது, அரிசியை சரியாக வேகவைப்பதுதான். சமைப்பதற்கான நேரத்தையும் தண்ணீர் விகிதத்தையும் சரியாகப் பெறுவதற்கு, பிரியாணி தயாரிப்பதற்கு முன் அரிசியை ஒரு குக்கரியில் தயாரிக்க முயற்சிக்கவும்.

Reviews for Hyderabadi Chicken Dum Biryani ( In a Pressure Cooker ) in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.