ஹாரா பாரா - சோயா கேபாப்கள் | Hara bhara - soya kebabs in Tamil

எழுதியவர் Soniya Saluja  |  9th Oct 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Hara bhara - soya kebabs recipe in Tamil,ஹாரா பாரா - சோயா கேபாப்கள், Soniya Saluja
ஹாரா பாரா - சோயா கேபாப்கள்Soniya Saluja
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  35

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

4229

0

ஹாரா பாரா - சோயா கேபாப்கள் recipe

ஹாரா பாரா - சோயா கேபாப்கள் தேவையான பொருட்கள் ( Ingredients to make Hara bhara - soya kebabs in Tamil )

 • 1 கொத்து - பசலிக்கீரை (நறுக்கியது)
 • 1 கப் - சோயா கட்டிகள் அல்லது கற்கள் (வேகவைத்தது)
 • 1 - உருளைக்கிழங்கு/வேகவைத்தது
 • கொத்துமல்லி இலைகள் - 1/2 கப்
 • 1 - பச்சை மிளகாய்
 • 1 - பூண்டு பற்கள்
 • 1.2 தேக்கரண்டி - மஞ்சள் தூள்
 • 1 தேக்கரண்டி - உலர் மாங்காய்த் தூள்/சாட் மசாலா
 • 2-4 தேக்கரண்டி - சோள கஞ்சி
 • 1/2 கப் - பிரெட் தூள்
 • 2 தேக்கரண்டி - எண்ணெய்
 • சுவைக்கேற்ற உப்பு

ஹாரா பாரா - சோயா கேபாப்கள் செய்வது எப்படி | How to make Hara bhara - soya kebabs in Tamil

 1. சோயா கட்டிகளை சில நிமிடங்கள் வேகவைக்கவும். வடிக்கட்டி அனைத்துத் தண்ணீரையும் பிழிந்துவிடவும். உணவு பிராசசரைச் சேர்த்து பொடி கற்களாக மாறும்வரை அடித்துக்கொள்ளவும். (நீங்கள் சோயா குருணைகளை நீங்கள் பயன்படுத்தினால் இந்த செயல்முறைத் தவிர்க்கவும்)
 2. ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, பூண்டு சேர்த்து 10 நிமிடங்கள் மிகவும் சிறு தீயில் பூண்டு சற்றே பொன்னிறமாகும்வரை வரை சூடுபடுத்தவும்.
 3. நறுக்கியப் பசலிக்கீரை, மஞ்சள் தூள் சேர்க்கவும். (மஞ்சள் தூள் பச்சை நிறத்தை தூக்கிவிடும்)
 4. கொத்துமல்லி பச்சை மிளகாய் சேர்க்கவும். கீரைகளில் தண்ணீர் முற்றிலுமாக ஆவியாகும்வரை சமைக்கவும்.
 5. சிறிது நேரம் ஆறவிடுக. சமைத்த பூண்டு பசலிக்கீரையை ஒரு பிளெண்டரில் சேர்த்து சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
 6. ஒரு கிண்ணத்தில் சோயா குருணை, பூண்டு, பசலிக்கீரைச் சாந்து, வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு அனைத்துத் தாளிப்புகளையும் 1 தேக்கரண்டி சோளக் கஞ்சியையும் சேர்க்கவும்.
 7. முறையாகக் கலந்து ஒரு உருண்டை பிடித்து சற்றே தட்டையாக்கிக்கொள்க.
 8. பிரட் தூள்களையும் மீதமுள்ள சோளக் கஞ்சியையும் கலந்துகொள்க. அடைகளை அதனுள் தள்ளி முறையாக வேகவைக்கவும்.
 9. ஒரு நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் தடவி சூடுபடுத்தி அனைத்து அடைகளும் இரண்டு பக்கங்களும் பொன்னிறமாகும்வரை வறுத்துக்கொள்ளவும்.
 10. தக்காளி கெச்சப் அல்லது சட்னியோடு சூடாகப் பரிமாறவும்.

Reviews for Hara bhara - soya kebabs in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.