மட்டன் கைமா பிரியாணி | Mutton Keema Biryani in Tamil

எழுதியவர் Fareeha Ahmed  |  28th Oct 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Mutton Keema Biryani by Fareeha Ahmed at BetterButter
மட்டன் கைமா பிரியாணிFareeha Ahmed
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  50

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

815

0

மட்டன் கைமா பிரியாணி recipe

மட்டன் கைமா பிரியாணி தேவையான பொருட்கள் ( Ingredients to make Mutton Keema Biryani in Tamil )

 • 500 கிராம் 30 நிமிடங்கள் ஊறவைத்த பாஸ்மதி அரிசி
 • 500 கிராம் மட்டன் கீமா/ மட்டன் துண்டுகள்
 • 2 பச்சை மிளகாய் பிளக்கப்பட்டது
 • 3 வெங்காயம் பொடியாக நறுக்கப்பட்டது
 • 3 தேக்கரண்டி பூண்டு விழுது
 • 2 தக்காளி பொடியாக நறுக்கப்பட்டது
 • 1 1/2 கப் அடித்து வைக்கப்பட்டுள்ள தயிர்
 • 2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
 • 2 தேக்கரண்டி மல்லித்தூள்
 • 2 எலுமிச்சைப் பழத்தின் சாறு
 • சுவைக்கேற்ற உப்பு
 • 4 தேக்கரண்டி எண்ணெய்
 • 2 தேக்கரண்டி நெய்/ வெளுக்கப்பட்ட வெண்ணெய்
 • 1 பிரிஞ்சி இலை
 • 1 இன்ச் இலவங்கப்பட்டைக் குச்சி
 • 2 ஏலக்காய்
 • 2 கிராம்பு
 • 1 தேக்கரண்டி சாஹி சீரகம்
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 4 தேக்கரண்டி கொத்துமல்லி இலைகள் பொடியாக நறுக்கப்பட்டது
 • 4 தேக்கரண்டி புதினா இலைகள்

மட்டன் கைமா பிரியாணி செய்வது எப்படி | How to make Mutton Keema Biryani in Tamil

 1. ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய்/நெய்யை சூடுபடுத்தி பிரிஞ்சி இலை, கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், சாஹி சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து 30 நொடிகள் வறுக்கவும்.
 2. வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும்வரை வறுக்கவும். இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து மேலும் 30 நிமிடங்கள் வதக்கவும்.
 3. அடுத்து மட்டன் துண்டுகள்/கீமா சேர்த்து எல்லா தண்ணீரும் காய்ந்து கீமா பழுப்பாக மாறும்வரை வேகவைக்கவும்.
 4. சிவப்பு மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு, தக்காளி, தயிர் சேர்த்து கலந்துகொள்ளவும். தக்காளி வெந்து எண்ணெய் கடாயின் பக்கங்களில் கசியும்வரை வேகவைக்கவும்.
 5. எலுமிச்சைச் சாறு, கொத்துமல்லி இலைகள், புதினா ஆகியவற்றைச் சேர்க்கவும். அடுப்பை நிறுத்திவிட்டு சாதம் தயாராகும்வரை எடுத்து வைக்கவும்.
 6. ஒரு பெரிய பாத்திரத்தில் சாதத்தை வேகவைக்கப் போதுமான தண்ணீரை கொதிக்கவிடவும். உப்பு ஒரு கரண்டி எண்ணெயை தண்ணீரில் சேர்க்கவும். எண்ணெய் அரிசியைத் தனித்தனியாக வைக்க உதவும். கொதிக்கும் நீரில் அரிசியைப் போடவும்.
 7. அரிசியை 70% வேகவைக்கவும் (இது மிகவும் முக்கியமானது. இந்தச் சமையத்தில் அடுப்பங்கரையை விட்டுபோகவேண்டாம். அரிசி எப்படி வெந்திருக்கிறது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றால். கீழே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பைக் காண்க).
 8. அரிசியை கீமா குழம்பில் சேர்க்கவும். கலக்கவேண்டாம். ஒரு தேக்கரண்டி நெய்யை அரிசியின் மீது விடவும்.
 9. ஃபாயிலால் மூடி முடிபோட்டு முடவும். ஃபாயில் ஆவியை வெளியேற்றாது.
 10. பரிமாறுவதற்கு முன் சாதத்தையும் குழம்பையில் கலந்துகொள்ளவும். ரைத்தா அல்லது பாகார் பைன்கானுடன் (கத்தரிக்காய்) சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

அரிசியை நேர்த்தியாகச் சமைக்க, தண்ணீரை கொதி நிலைக்குக் கொண்டுவந்து அரிசியைச் சேர்க்கவும். தண்ணீர் மீண்டும் கொதி வரும்போது, மேலும் 5 நிமிடங்கள் வேகவைக்கவும். இது முற்றிலும் அரிசியின் தரத்தைப் பொறுத்து அமையும். உங்கள் விரல்களுக்கு நடுவில் வைத்து அரிசியை நசுக்கும்போது தானியமாக இல்லாமல் அல்லது குழையவும் இல்லாமல் இருக்கவேண்டும். இரண்டும் மத்தியில் இருக்கவேண்டும். அரை வேக்காடாக. ஒரு தவாவில் சமைக்கும்போது அடிபிடிக்கக்கூடாது. ஆவியை உள்ளேயே வைப்பதற்கு சிலர் மூடியின் விளிம்புகளை சப்பாத்தி மாவினால் மூடுவர். நான் சோம்பேறி, அதற்குப் பதிலாக எண்ணெய் பயன்படுத்துவேன்.

Reviews for Mutton Keema Biryani in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.