வீடு / சமையல் குறிப்பு / வீட்டில் தயாரிக்கப்படும் நூடுல்ஸ்

Photo of Homemade noodles by Nusrath Jahan at BetterButter
2449
198
4.9(0)
0

வீட்டில் தயாரிக்கப்படும் நூடுல்ஸ்

Nov-02-2015
Nusrath Jahan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • பான் ஆசியன்
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1/2 கப் - முழு கோதுமை மாவு
  2. 1 - தக்காளி
  3. 1 - வெங்காயம்
  4. 3 தேக்கரண்டி + 1 தேக்கரண்டி - எண்ணெய்
  5. 2 தேக்கரண்டி - குடமிளகாய் நறுக்கியது
  6. 2 தேக்கரண்டி - நறுக்கிய கேரட்
  7. 2 தேக்கரண்டி - பச்சை பட்டாணி
  8. 1 தேக்கரண்டி - இஞ்சிப்பூண்டு விழுது
  9. 1 தேக்கரண்டி - மல்லித்தூள்
  10. 1 தேக்கரண்டி - சாட் மசாலா
  11. 1/2 தேக்கரண்டி - மிளகாய்த் தூள்
  12. 1/2 தேக்கரண்டி - சீரகத்தூள்
  13. 1/2 தேக்கரண்டி - கரம் மசாலா
  14. 1/4 தேக்கரண்டி - மஞ்சள் தூள்
  15. 2 கப் - தண்ணீர்
  16. தேவையான அளவு உப்பு

வழிமுறைகள்

  1. மாவு, ஒரு தேக்கரண்டி எண்ணெய், 2 சிட்டிகளை உப்பு ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் கலந்து தேவையானத் தண்ணீரைச் சேர்த்து மென்மையான மாவாக பிசைந்து 10 நிமிடங்கள் விட்டுவைக்கவும்.
  2. மெலிதான சப்பாத்தியாக மாவை உருட்டிக்கொள்க. பீசா வெட்டி அல்லது ஒரு கத்தியால் சப்பாத்தியை மெலிதான நூடுல்சாக வெட்டிக்கொள்க.
  3. அலுமினிய ஃபாயிலில் அல்லது ஒரு பெரிய தட்டு அல்லது ஒரு செய்தித்தாளில் மாவைத் தாராளமாக தெளித்துக்கொள்க.
  4. நூடுல்சை ஃபாயிலில் வைத்து தாராளமாக மாவைத் தூவிக்கொள்க, அப்போதுதான் ஒன்றையொன்று ஒட்டிக்கொள்ளாது.
  5. ஒரு தவாவில் அல்லது கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி, வெங்காயம் சேர்த்த மென்மையாக வதக்கிக்கொள்க. தக்காளி சேர்த்து மென்மையாக வேகவைக்கவும்.
  6. நறுக்கிய காய்கறிகளை அனைத்து உலர் மசாலாக்களோடு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மூடி பட்டாணி வேகும்வரை வேகவைக்கவும்.
  7. 2 கப் தண்ணீரை இவற்றோடு சேர்த்து கொதிக்கவிடவும். இபபோது நூடுல்சை தூவப்பட்ட மாவோடு போடவும்.
  8. நூடுல்ஸ் வேகும்வரை வேகவைத்து சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்