பேல் பூரி | Bhel Puri in Tamil

எழுதியவர் Rashmi Krishna  |  5th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Bhel Puri recipe in Tamil,பேல் பூரி, Rashmi Krishna
பேல் பூரிRashmi Krishna
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  0

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

3045

0

பேல் பூரி recipe

பேல் பூரி தேவையான பொருட்கள் ( Ingredients to make Bhel Puri in Tamil )

 • 1 கப் - பொரி
 • 1/4 கப் - பொடியாக நறுக்கப்பட்ட விதை நீக்கப்பட்ட பழுத்தத் தக்காளி
 • 1/2 கப் - பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம்
 • 1 தேக்கரண்டி - துருவிய இஞ்சி
 • 1 கப் - நசுக்கிய மத்ரி (ராஜஸ்தானிய சிற்றுண்டி)
 • 1 1/2 கப் - சேவ்
 • 3-4 தேக்கரண்டி பச்சை சட்னி
 • 2-3 தேக்கரண்டி சிவப்பு சட்னி/இனிப்பு சட்னி
 • 1/2 தேக்கரண்டி கருப்பு உப்பு (விருப்பம் சார்ந்தது)
 • 1/2 தேக்கரண்டி - சாட் மசாலா
 • 1/2 தேக்கரண்டி - கரம் மசாலா
 • 1/4 கப் - வறுத்த வேர்கடலை (உப்பு சேர்த்தது அல்லது உப்பு சேர்க்காதது)
 • 1/4 கப் நறுக்கிய கொத்துமல்லி
 • 1 எலுமிச்சையின் சாறு
 • 1/4 கப் - உடைத்த பட்டாணி ஊறவைத்து வேகவைத்தது
 • பச்சை சட்னிக்கு:
 • கொத்துமல்லி - 1 கொத்து
 • புதினா இலைகள் - 1 சிறிய கொத்தில் 1/2
 • பச்சை மிளகாய் - 2 அல்லது 3
 • நறுக்கிய வெங்காயம் - 1
 • 2 பற்கள் கிராம்பு
 • விருப்பத்திற்கேற்ப சாட் மசாலா
 • சுவைக்கேற்றபடி சர்க்கரை
 • 1/2 எலுமிச்சையின் சாறு
 • இனிப்பு சட்னிக்கு:
 • சிறிய எலுமிச்சை அளவு புளி உருண்டை
 • 5 அல்லது அதற்கும் மேல் பேரிச்சம்பழம் அடித்துப் பொடியாக நறுக்கப்பட்டது
 • சிவப்பு மிளகாய்த் தூள்
 • பெருஞ்சீரகம்
 • சுக்குப்பொடி
 • சீரகத் தூள்
 • மல்லித்தூள் (விருப்பம் சார்ந்தது)
 • ஒரு சிட்டிகை கரம் மசாலா
 • சுவைக்கேற்ற உப்பு
 • தேவையான பதத்திற்குரிய தண்ணீர்

பேல் பூரி செய்வது எப்படி | How to make Bhel Puri in Tamil

 1. சட்னியை முன்னரே தயாரித்து வைத்துக்கொண்டேன். உங்கள் விருப்பப்படி சுவையை மாற்றிக்கொள்ளலாம், இனிப்பு, உப்பு, காரம், பதம், இன்னப்பிறவற்றின் அளவை.
 2. மாட்டரைக் கொதிக்கவைத்து கொஞ்சம் உப்பு சாட் மசாலாவைத் தூவி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 3. எல்லா பொருள்களையும் அகலமானப் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
 4. மாட்டரைச் சேர்த்துக்கொள்க. ஒரு கரண்டியால் அடித்துக்கொள்க. சுவை பார்த்து சரிசெய்து, மீண்டும் அடித்துக்கொள்ளவும்.
 5. சேவ் மற்றும் புதிய கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்.
 6. சொதசொதப்பாக மாறிவிடும் என்பால் உடனே பரிமாறவும்.

எனது டிப்:

அதிகபட்ச நறுமணம் அதிலிருந்து வருவதால், தயவுசெய்து உங்கள் விருப்பப்படியே சட்னியைத் தயாரித்துக்கொள்ளவும்

Reviews for Bhel Puri in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.