பிரெட் பாக்கெட்டுகள் | Bread pockets in Tamil

எழுதியவர் Febina Farook  |  12th Nov 2015  |  
1 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Bread pockets by Febina Farook at BetterButter
பிரெட் பாக்கெட்டுகள்Febina Farook
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

4578

1

Video for key ingredients

 • Homemade Mayonnaise

பிரெட் பாக்கெட்டுகள் recipe

பிரெட் பாக்கெட்டுகள் தேவையான பொருட்கள் ( Ingredients to make Bread pockets in Tamil )

 • பிரெட் துண்டுகள் 10
 • பிரெட் தூள் (மீதமுள்ள 10 பிரெட்களில் இருந்து)
 • அடிக்கப்பட்ட 1 முட்டை
 • பூரணத்திற்கு:
 • 2 வெங்காயம் நறுக்கியது
 • 1 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
 • 1/2 தக்காளி நறுக்கியது
 • 1/2 தேக்கரண்டி காஷ்மீர் மிளகாய்த் தூள்
 • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 2 தேக்கரண்டி தக்காளி கெச்சப்
 • 2 தேக்கரண்டி மையோனைஸ்
 • 1/2 கப் வேகவைத்து துருவியச் சிக்கன்
 • 1/2 கப் பச்சைப் பட்டாணி நான் உறையவைத்ததைப் பயன்படுத்தினேன்
 • பொரிப்பதற்கு எண்ணெய்
 • உப்பு

பிரெட் பாக்கெட்டுகள் செய்வது எப்படி | How to make Bread pockets in Tamil

 1. பூரணம் தயாரிப்பதற்கு:
 2. ஒரு கடாயைச் சூடுபடுத்தி ஒரு தேக்கரண்டி எண்ணெயைச் சேர்க்கவும். அவற்றில் வெங்காயத்தை வதக்கவும். இஞ்சிப்பூண்டு விழுதைச் சேர்க்கவும். வெங்காயம் பளபளப் பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
 3. நறுக்கிய தக்காளியைச்சேர்த்து தக்காளி மசியும்வரை வதக்கவும். காஷ்மீர் மிளகாய்த் தூள் மஞ்சள் தூள் சேர்க்கவும். நன்றாகக் கலந்துகொள்ளவும்.
 4. தக்காளி கெச்சப் மையோனைஸ் சேர்க்கவும். உறைந்த பச்சைப் பட்டாணியைச் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
 5. சிக்கன் சேர்க்கவும். மசாலா நன்றாகச் சிக்கன் துண்டுகளில் பூசப்படும்வரை கலந்து அடுப்பை நிறுத்தவும். பூரணத்தை எடுத்து வைக்கவும்.
 6. பிரெட் துண்டுகள் தயாரிப்பு:
 7. பிரெட் துண்டுகளை எடுத்துக்கொள்க. கடினமானப் பகுதிகளை வெட்டிவிடவும். இரண்டு துண்டுகளில் ஒன்றின் மீது வைத்து ஒரு உருட்டைக்கட்டையால் தட்டையானத் துண்டுகளாக உருட்டிக்கொள்க. குக்கீ பாத்திரத்தைப் பயன்படுத்தி அல்லது பெரிய வட்ட வடிவத்தை பிரட் துண்டுகளில் இருந்து ஒரு மூடியால் வெட்டிக்கொள்ளவும்.
 8. மீதமுள்ள பிரட் பகுதிகளை பிரட் தூள்கள் தயாரிக்க எடுத்துவைக்கவும். இதையே மற்ற துண்டுகளுக்கும் மேற்கொள்ளவும். 10 துண்டுகள் தேவைப்படும். வட்டங்கள் அடித்துவைத்துள்ள முட்டையில் தொய்த்து பிரட் துண்டுகளை நனைக்கவும்.
 9. ஒரு வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்துக. உப்பி பொன்னிறமாக மாறும்வரை வட்டங்களை பொரிக்கவும். பொரித்த வட்டங்கள் பேப்பர் துண்டில் எடுத்துக்கொள்க.
 10. வட்டத்தின் மையத்தில் பாக்கெட் செய்ய வெட்டிக்கொள்க. பள்ளத்தில் பூரணத்தை வைக்கவும். நறுக்கியத் தக்காளியைச் சேர்க்கவும். சூடாகப் பரிமாறி உண்டு மகிழவும்.

Reviews for Bread pockets in tamil (1)

Reshma Reshma2 years ago

Kk
Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.