தீபாவளி லேகியம் | Diwali Lehiyam in Tamil

எழுதியவர் Sujatha Arun  |  13th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Diwali Lehiyam by Sujatha Arun at BetterButter
தீபாவளி லேகியம்Sujatha Arun
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  50

  மக்கள்

163

0

தீபாவளி லேகியம் recipe

தீபாவளி லேகியம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Diwali Lehiyam in Tamil )

 • புதிய இஞ்சி 250 கிராம்
 • சீரகத்தூள் 50 கிராம்
 • மல்லித்தூள் 50 கிராம்
 • வெல்லம் 500 கிராம் தூளாக்கப்பட்டது
 • நெய் 3 தேக்கரண்டி

தீபாவளி லேகியம் செய்வது எப்படி | How to make Diwali Lehiyam in Tamil

 1. இஞ்சியை கழுவி தேல் உறித்து, அவற்றை வட்டமாக அரிந்து, தண்ணீர் விடாமல் மென்மையான சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
 2. இப்போது சீரகம், மல்லித்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து எடுத்து வைக்கவும்.
 3. வெல்லத்தையும் 1/8 கப் தண்ணீரை ஒரு பெரிய அடிப்பாகமுடைய பாத்திரத்தில் கலந்து நடுத்தர வெப்பத்தில் சூடுபடுத்தவும், வெல்லத்தை உருகவிடுவதற்கு.
 4. இப்போது அசுத்தங்களை நீக்குவதற்கு வெல்லப் பாகை வடிக்கட்டி அதே பாத்திரத்திற்கு மீண்டும் கொண்டுவரவும்.
 5. மிதமான வெப்பத்தில் சூடுபடுத்தவும், ஒரு தண்ணீர் பாத்திரத்தில் கொஞ்சம் நீங்கள் விடும்போது. அதை உங்களால் சுருட்டவும் முடியக்கூடிய பதத்தில் வெல்லப்பாகு அடர்த்தியாகட்டும்.
 6. இப்போது இஞ்சி, சீரகம், கொத்துமல்லி சேர்த்து கலக்கி சிறு தீயில் சமைக்கவும்.
 7. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் சமைத்தபிறகு, 1 தேக்கரண்டி நெய் சேர்த்து கலக்கவும்.
 8. அடுத்த 5 நிமிடங்களில் மேலும் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து மீண்டும் தொடர்ந்து கலக்கவும்.
 9. மேலுமொரு நிமிடத்திற்குப் பிறகு, கலவை ஒன்றாக வருவதை நீங்கள் பார்க்கலாம், இப்போது மீதமுள்ள 1 தேக்கரண்டி நெய் சேர்த்து சமைக்கவும்.
 10. கிட்டத்தட்ட 2 அல்லது 3 நிமிடங்களில் பாத்திரத்தின் விளிம்பிலிருந்து விடுபடுவதையும் அல்வாவைப்போல் இருப்பதையும் பார்ப்பீர்கள்.
 11. தீயை அடக்கிவிட்டு அடுப்பிலிருந்து எடுத்துவிடவும்.
 12. முற்றிலுமாக ஆறவிட்டு ஒரு சுத்தமான காற்றுபுகா பாத்திரத்தில் விருப்பத்திற்கேற்ப ஸ்டீல் பாத்திரத்திற்கு மாற்றவும்.
 13. இது முற்றிலுமாக ஆறியதும், குளிர்பதனப்பெட்டியில் வைத்துக்கொள்ளவும்.
 14. பரிமாறும் அளவு, தினமும் காலையில் 1 கோலிகுண்டு அளவு

Reviews for Diwali Lehiyam in tamil (0)