சிக்கன் குருமா | Chicken Korma in Tamil

எழுதியவர் Deeba Rajpal  |  16th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Chicken Korma by Deeba Rajpal at BetterButter
சிக்கன் குருமா Deeba Rajpal
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  45

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

2216

0

சிக்கன் குருமா

சிக்கன் குருமா தேவையான பொருட்கள் ( Ingredients to make Chicken Korma in Tamil )

 • 800 கிராம் கோழி எலும்புடன் துண்டுகளாக வெட்டியது
 • 1/3 கப் நெய்
 • 3 வெங்காயம் நன்றாக வெட்டியது {சுமார் 200 கிராம்}
 • 5-6 பச்சை ஏலக்காய்/ பச்சை ஏலச்சி {சிறிதாக நறுக்கப்பட்டது}
 • 1 1/2 தேக்கரண்டி இஞ்சி விழுது
 • 1 1/2 தேக்கரண்டி பூண்டு விழுது
 • 200 கிராம் கெட்டியான அடித்த தயிர்
 • 4 டீக்கரண்டி கொத்தமல்லி தூள் சலித்தது
 • 1 1/2 டீக்கரண்டி சிகப்பு மிளகாய்த்தூள்
 • 5-6 முழு கிராம்பு

சிக்கன் குருமா செய்வது எப்படி | How to make Chicken Korma in Tamil

 1. அடிகனமான ஒட்டாத கடாயில் நெய் விட்டு சூடுசெய்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். {இது கறுகிவிட கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள், இல்லையெனில் குருமா கசப்பானதாகிவிடும்}.
 2. பின்னர் வெங்காயத்தை நீக்கிவிட்டு நெய்யை ஆறவைக்கவும். வெங்காயத்தில் 1-2 தேக்கரண்டி தயிர் கலந்து அரைக்கவும். மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை தனியாக வைத்துக் கொள்ளவும்.
 3. அதே கடாயில் மீதமுள்ள எண்ணெய்யை ஊற்றிக் கொள்ளவும், ஏலக்காய்/சொட்டி ஏலச்சி மற்றும் கிராம்பு சேர்த்து வாசனை வரும் வரை 1-2 நிமிடம் வரை வறுக்கவும் ( தேவையெனில் மேலும் சிறு நெய் சேர்த்துக் கொள்ளவும்)
 4. இப்போது கோழித் துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும். உலர்ந்து, பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதை கடாயில் இருந்து எடுத்து தனியாக கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
 5. சூடான நெய்யில் சலித்த கொத்தமல்லித் தூள், சிகப்பு மிளகாய்த்தூள், இஞ்சி மற்றும் பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும். ஒன்றாக வரும் வரை 1-2 நிமிடங்கள் நன்றாக கலந்துக் கொள்ளவும். பிறகு சிக்கனை திரும்ப சேர்த்து 2-3 நிமிடங்கள் கிண்டவும்.
 6. இப்போது வெங்காயம்-தயிர் கலவையையும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி கடாயை மூடி அதை 20 நிமிடங்கள் வரை லேசான தீயில் வேகவிடவும். இப்போது குழம்பு மனமாகவும் அழகான நிறத்திலும் இருக்கும்.
 7. உங்களுக்கு இன்னும் குழம்பு வேண்டுமென்றால் சிறிது நீர் சேர்த்து அதற்கு ஏற்றவாறு உப்பு சேர்த்துக் கொள்ளவும். சுவை அனைத்தும் சேர்வதற்கு பரிமாறுவதற்கு 30 நிமிடங்கள் முன்பு செய்து வைத்துவிடவும். உங்களுக்கு தேவையெனில் கரம் மசாலாவை சிறிது தூவிக்கொண்டு ரொட்டியுடன் சேர்த்து பரிமாறவும்.

எனது டிப்:

இந்த செய்முறையை செம்மறியாட்டு கறியிலும் நீங்கள் முயற்சி செய்யலாம். அவ்வாறு செய்கையில், இது வேகும் நேரம் சிறிது அதிகரிக்கும் ஆனால் உணவில் சுவை ஒன்றாக தான் இருக்கும். செம்மறியாட்டுகறிக்கு இறைச்சியை சில மணிநேரம் தயிரில் ஊறவைத்து, குறைந்த நெருப்பில் சமைக்க வேண்டும்.

Reviews for Chicken Korma in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.