மூவகைக் கீரை சாதம் | Rice with triple greens in Tamil

எழுதியவர் Sujatha Niranjan  |  26th Nov 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Rice with triple greens by Sujatha Niranjan at BetterButter
மூவகைக் கீரை சாதம்Sujatha Niranjan
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

48

0

மூவகைக் கீரை சாதம்

மூவகைக் கீரை சாதம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Rice with triple greens in Tamil )

 • 400 கிராம் சாதம் - வேகவைக்கப்பட்டது - பரவச் செய்து ஆறவைக்கப்பட்டது
 • புதினா இலைகள் - 1 1/2 கப் - கழுவப்பட்டது
 • கொத்துமல்லி இலைகள் - 1 கப் - கழுவப்பட்டது
 • கறிவேப்பிலை - 1 கப் - கழுவப்பட்டது
 • காய்ந்த மிளகாய் 4
 • புதிதாகத் திருவப்பட்டத் தேங்காய் - 3 தேக்கரண்டி
 • புளி விழுது - 1 தேக்கரண்டி
 • சமையல் எண்ணெய் - 2 தேக்கரண்டி
 • நல்லெண்யை - 4 தேக்கரண்டி
 • முந்திரி பருப்பு - 15
 • தாளிப்புக்கு -
 • நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
 • கடுகு - 1 தேக்கரண்டி
 • உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

மூவகைக் கீரை சாதம் செய்வது எப்படி | How to make Rice with triple greens in Tamil

 1. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்க. சிவப்பு மிளகாய் சேர்க்கவும். புதினா இலைகளைச் சேர்த்து 3-5 நிமிடங்கள் வறுக்கவும் - கருகச் செய்யவேண்டாம்.
 2. கரிவேலைப்பிலை சேர்த்து 3-5 நிமிடங்கள் வறுக்கவும். கொத்துமல்லி சேர்த்து 2 நிமிடங்கள் வறுக்கவும்.
 3. தேங்காய் மற்றும் புளி விழுது சேர்க்க. 2 நிமிடங்கள் வேகவைக்கவும். அதன்பின் உப்பு சேர்க்கவும்.
 4. இந்தக் கலவையை ஆறவிட்டு கரடுமுரடாக அரைத்து - எடுத்து வைத்துக்கொள்க.
 5. அதே கடாயை சூடுபடுத்தி இரண்டு தேக்கரண்டி நல்லெண்யை விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கரிவேப்பிலையோடு சூடுபடுத்திய பிறகு முந்திரிப்பருப்புகளைச் சேர்க்கவும்.
 6. அரைத்தக் கலவையைச் சேர்க்கவும் - நன்றாகக் கலந்து 2 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.
 7. சாதத்தோடு மீதமுள்ள நல்லெண்யைச் சேர்தது நன்றாகக் கலந்துகொள்க ( இது உங்கள் விருப்பம்). அதன்பிறகு கீரைக் கலவையைச் சேர்த்துக்கொள்க.
 8. பொரித்த அப்பளம்/உருளைக்கிழங்கு வறுவலோடு பரிமாறவும்.

Reviews for Rice with triple greens in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.