Photo of Paalaada by Ayesha Ziana at BetterButter
1056
6
0.0(0)
0

பாலாடை

Oct-05-2017
Ayesha Ziana
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாலாடை செய்முறை பற்றி

தேங்காய்ப்பால் மற்றும் சில பொருட்களால் செய்த மெல்லிய அப்பம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • கேரளா
  • ரோசஸ்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சரிசி 1 கப்
  2. துருவிய தேங்காய் 3/4 கப்
  3. நாட்டு முட்டை 1 1/2 அல்லது சாதா முட்டை 1
  4. உப்பு தேவைக்கு
  5. தண்ணீர் தேவைக்கு

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் தேங்காயை அரைத்து பால் பிழியவும். 3 தடவை செய்தால் மொத்தம் 1 கப் கிடைக்கும். இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.
  2. 2-4 மணி நேரம் ஊற வைத்த பச்சரிசியைத் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து அதையும் பாத்திரத்தில் ஊற்றவும்.
  3. முட்டையை மிக்ஸியில் அரைத்து அதையும் ஊற்றவும்.
  4. உப்பு சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீரும் சேர்த்துக் கலக்கவும். மாவு மிகவும் தண்ணீர் தன்மை உடையதாக இருக்க வேண்டும்.
  5. ஒரு சூடான நான்ஸ்டிக் தவாவில் ஒரு கரண்டி மாவு ஊற்றி நன்றாக எல்லா இடமும் படும்படி தவாவைச் சுற்றி, மிதமான தீயில் வேக வைக்கவும்.
  6. ஓரங்கள் இளகியதும் தவாவை ஒரு தட்டில் கவிழ்க்கவும். பாலாடை நன்றாக வெந்து இருந்தால் தானே தட்டில் விழுந்து விடும். இல்லையெனில் மேலும் வேக வைக்கவும். ஒரு பாலாடை வேக உத்தேசம் 1 நிமிடம் ஆகும்.
  7. தட்டில் விழுந்த பாலாடையை 1/2 நிமிடம் கழித்து முக்கோண வடிவில் மடக்கவும். உடனே மடக்க முற்பட்டால் பிய்ந்து விடும், எனவே கவனம் தேவை.
  8. குருமா, முட்டை கறி, இறைச்சி கறி, தேங்காய்ப்பாலும் பழமும், போன்றவை இதற்கு சிறந்த காம்பினேஷன். இது கேரளா, கன்யாகுமரி, போன்ற இடங்களின் பிரபலமான சிற்றுண்டி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்