வீடு / சமையல் குறிப்பு / வெள்ளரிக்காய் புளிக்கறி குழம்பு (வெண்டைக்காயிலும் பண்ணலாம்)

Photo of Cucumber pulikari gravy by prashanthy Gopal at BetterButter
762
2
0.0(0)
0

வெள்ளரிக்காய் புளிக்கறி குழம்பு (வெண்டைக்காயிலும் பண்ணலாம்)

Oct-06-2017
prashanthy Gopal
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெள்ளரிக்காய் புளிக்கறி குழம்பு (வெண்டைக்காயிலும் பண்ணலாம்) செய்முறை பற்றி

தேங்காயும், புளி தண்ணீரிலும் செய்கின்ற குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • சிம்மெரிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேங்காய் 1 கப்
  2. சின்ன வெங்காயம் 2
  3. புளிதண்ணீர் 1/2 கப் அளவுக்கு விடவும்
  4. வத்தல் மிளகு 5
  5. மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
  6. சீரகம் 1 தேக்கரண்டி
  7. வெள்ளரிக்காய் நறுக்கியது 12
  8. வெள்ளரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், மாங்காய் இப்படி இந்த நான்கு காய்கறிகளையும் பண்ணலாம்
  9. உப்பு தேவையான அளவு
  10. கருவேப்பிலை 2 கொத்து
  11. எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  12. கடுகு 1 தேக்கரண்டி
  13. வெந்தயம் 1/2 தேக்கரண்டி
  14. தண்ணீர் 1 1/2 கப்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, வத்தல் மிளகு போட்டு வதக்கவும்
  2. சின்ன வெங்காயத்தை மிகவும் சின்னதாக கட் பண்ணி வைக்கவும்
  3. சின்னவெங்காயத்தையும் போட்டு வதக்கவும்
  4. அப்புறமாக மீடியம் அளவில் வெள்ளரிக்காய் நறுக்கி கடாயில் போட்டு வதக்கி 1/2 கப் தண்ணீர் விட்டு வேகவைக்கவும்
  5. அப்புறமாக உப்பும், 1/4 கப் புளி தண்ணீர் விட்டு வேகவைக்கவும்
  6. இனி தேங்காய் சீரகம் 4 வத்தல் முளகு மஞ்சள் தூள் போட்டு தண்ணீர் விட்டு நன்காக அரைத்து விடவும்
  7. வெள்ளரிக்காய் நல்ல வெந்தபின் அரைச்சு வைத்த தேங்காயும் விட்டு 1/4 கப் புளி தண்ணீர் விட்டு 1கப் வெறும் தண்ணீரும் விட்டு கிளறி கொடுத்து 3 லா இருந்து 5 நிமிடங்கள்குள் மூடி வைக்க வேண்டும்
  8. நல்ல கொதிக்க விடக்கூடாது. அதுனால் கொஞ்சமாக கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்
  9. கொதி வந்தபின் ருசி பாத்து உப்பு மட்டும் சேர்க்கலாம்
  10. இப்போ சுவையான புளிக்கறி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்