வீடு / சமையல் குறிப்பு / வறுத்தரச்ச மட்டன் கறி

Photo of Varutharacha Mutton Curry by Ayesha Ziana at BetterButter
1289
5
0.0(0)
0

வறுத்தரச்ச மட்டன் கறி

Oct-07-2017
Ayesha Ziana
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வறுத்தரச்ச மட்டன் கறி செய்முறை பற்றி

வறுத்து அரைத்த தேங்காய் மசாலாவில் செய்த மட்டன் கறி

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை கொண்டாட்டம்
  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • அக்கம்பனிமென்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மட்டன் 1/2 கிலோ
  2. சின்ன வெங்காயம் 10+
  3. தக்காளி 2 சிறியது
  4. பச்சை மிளகாய் (தேவைப்பட்டால்) 1
  5. இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி
  6. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  8. மல்லி தூள் 2 தேக்கரண்டி
  9. சீரகத்தூள் 1/2 தேக்கரண்டி
  10. உப்பு தேவைக்கு
  11. தண்ணீர் தேவைக்கு
  12. கறிவேப்பிலை 1 கொத்து
  13. தேங்காய் எண்ணெய்/ நல்லெண்ணெய் தேவைக்கு
  14. துருவிய தேங்காய் 4 தேக்கரண்டி
  15. ஏலம் 3
  16. கிராம்பு 3
  17. பட்டை 3 சிறியது
  18. மிளகு 20+
  19. சோம்பு 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
  2. பின், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. மட்டன், 1 கப் தண்ணீர் சேர்த்து அதிக தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  4. பின் உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  5. பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், சேர்த்து கலந்து மூடி மிதமான தீயில் வேக விடவும்.
  6. மற்றொரு கடாயில் தேங்காய், ஏலம், கிராம்பு, பட்டை, மிளகு, சோம்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும்.
  7. மட்டன் 80% வெந்ததும், அரைத்த தேங்காய் மசாலா, தேவைப்பட்டால் சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.
  8. கறி சரியான பதம் வந்ததும் இறக்கிப் பரிமாறவும். சூப்பரான தேங்காய் வறுத்தரச்ச மட்டன் கறி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்