வீடு / சமையல் குறிப்பு / மட்டன் முருங்கைக்காய் சால்னா

Photo of Mutton drumstick salna by Asiya Omar at BetterButter
486
5
0.0(0)
0

மட்டன் முருங்கைக்காய் சால்னா

Oct-13-2017
Asiya Omar
900 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் முருங்கைக்காய் சால்னா செய்முறை பற்றி

முருங்கைக்காயை சாம்பார், புளிக்குழம்பில் போட்டு சமைப்போம். ஒரு முறை மட்டன் அல்லது சிக்கனில் போட்டு சமைத்து பாருங்க, அருமையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆட்டு இறைச்சி/ மட்டன் - அரைக்கிலோ
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் குவியலாய்.
  3. வீட்டு குழம்பு மசாலா - 2 டேபிள்ஸ்பூன்
  4. தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
  5. மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
  6. கரம் மசாலா - கால்டீஸ்பூன் (ஏலம் பட்டை கிராம்பு த்தூள்)
  7. சோம்புத்தூள், சீரகத்தூள் - தலாகால் அல்லது அரைடீஸ்பூன்
  8. வெங்காயம் - 150 கிராம்
  9. தக்காளி - 150 கிராம்
  10. பச்சைமிளகாய் -3
  11. மல்லி இலை - சிறிது
  12. முருங்கைக்காய் -2
  13. எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
  14. உப்பு - தேவைக்கு.
  15. அரைக்க தேங்காய்த்துருவல்- அரை கப்
  16. முந்திரிபருப்பு - 4

வழிமுறைகள்

  1. மட்டனை சுத்தம் செய்து குறைந்தது மூன்று தண்ணீர் வைத்து அலசி நீரை வடிகட்டி வைக்கவும்
  2. மட்டனுடன் தயிர்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,தேவைக்கு பாதி டீஸ்பூன் உப்ப,2 டேபிள்ஸ்பூன் மசாலாத்தூள் சேர்க்கவும்.
  3. எல்லாம் ஒரு சேர பிரட்டி ஊற விடவும்.
  4. ஒரு பாத்திரத்தில் 2 முருங்கைக்காய் விரும்பியபடி துண்டு போட்டு தண்ணீர், உப்பு சிறிது மசாலா சேர்த்து முக்கால் பதம் வேக விடவும்.
  5. வெங்காயம் தக்காளி, மல்லி இலை நறுக்கி வைக்கவும்.
  6. தேங்காய் முந்திரி அரைத்து வைக்கவும்.
  7. குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  8. வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன், கரம்மசாலா சேர்க்கவும்.
  9. சிம்மில் வைத்து வதக்கவும்.மல்லி, மிளகாய், தக்காளி சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
  10. நன்கு வதங்கியதும் சீரகம், சோம்பு, மிளகாய்த்தூள் மேற்சொன்னபடி சேர்க்கவும்.
  11. நன்கு வதக்கி மட்டன் சேர்க்கவும்.
  12. பிரட்டி விட்டு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை முடி விசில் போடவும்.
  13. முதல் விசில் வந்தவுடன் அடுப்பை குறைத்து 10 நிமிடம் வைத்து மட்டன் வேக வைத்து அணைக்கவும்.
  14. முக்கால் வேக்காடு வேக வைத்தமுருங்கைக்காய் சேர்க்கவும்
  15. அரைத்த தேங்காய் முந்திர விழுது சேர்க்கவும்.தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  16. கொதி வந்து தேங்காய் வாடை மடங்கியதும், எண்ணெய் மேலே வரும். அடுப்பை அணைக்கவும்.
  17. சுவையான மட்டன் முருங்கைக்காய் சால்னா தயார். வெறும் சோறுடன் பரிமாறினால் அசத்தலாக இருக்கும்.
  18. நீங்கள் கறிக்குழம்பிற்கு சேர்க்கும் மசாலா சேர்த்து முருங்கைக்காய் சேர்த்து செய்து பாருங்க. செமையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்