Photo of Thalagam by Krishnasamy Vidya Valli at BetterButter
601
4
0.0(3)
0

Thalagam

Oct-24-2017
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • நவ்ரதாஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி - 2 தேக்கரண்டி
  2. துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி
  3. எள்ளு - 1 தேக்கரண்டி
  4. மிளகாய் வத்தல் - 8
  5. தேங்காய் துருவல்- 1 1/2 cup
  6. புளி - சிறிய எலுமிச்சை அளவு
  7. உப்பு - 1 1 / 2 தேக்கரண்டி
  8. காய்கள் நறுக்கியது - 2 கப் ( வெண்டைக்காய், உருளை, கேரட், சௌசௌ, பூசணிக்காய், வாழைக்காய், கத்தரிக்காய், சேப்பங்கிழங்கு, தடியங்காய் இவற்றில் ஏதேனும் ஐந்து வகை காய்கள் )
  9. மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
  10. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  11. கடுகு - 1 தேக்கரண்டி
  12. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  13. தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
  14. தாளிக்க - மிளகாய் வத்தல் - 2

வழிமுறைகள்

  1. காய்களை குழம்பு தான் அளவில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  2. நறுக்கிய காய்களை ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வதக்கவும்
  3. அதில் தண்ணீர் மஞ்சள் பொடி சேர்த்து வேகவிடவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பச்சரிசி, துவரம்பருப்பு, எள்ளு, மிளகாய் வத்தல் சேர்த்து சிவக்க வறுத்துக்கொள்ளவும்
  5. அதே கடாயில் வறுத்ததை எடுத்து விட்டு தேங்காய் துருவலில் பாதியை போட்டு ஈரப்பதம் போகும்வரை வறுக்கவும்
  6. Mixi-ல் மீதமுள்ள தேங்காயில் இரண்டு தேக்கரண்டி தனியாக எடுத்து வைக்கவும், மீதியுள்ளதை ஏற்கனவே வறுத்த அரிசி, பருப்பு, எள்ளு, மிளகாய் வத்தல், தேங்காய் துருவல் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்
  7. காய்கள் பாதி வெந்தவுடன் புளியை கரைத்து விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்
  8. புளி பச்சை வாசனை போனவுடன் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்கவிடவும்
  9. நன்றாக ஒரு கொதி வந்தவுடன் இறக்கி எண்ணெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, மிளகாய் வத்தல் மீதியுள்ள இரண்டு தேக்கரண்டி தேங்காய் துருவல் சேர்த்து தாளிக்கவும்
  10. சுவையான தாளககுழம்பு தயார்

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Happy Home Maker-Tamil
Nov-06-2017
Happy Home Maker-Tamil   Nov-06-2017

Nice recipe. Will try this recipe. Thanks for sharing.

Mani Iyer
Oct-24-2017
Mani Iyer   Oct-24-2017

Nice preparation. Verrrrrry tasty.

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்